
PAKvsNED : 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 20223 தொடரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 6) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
சிறிய அணியான நெதர்லாந்தை, தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் பந்தாடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் டாப் ஆர்டர் பேட்டிங் மளமளவென சரிந்தது.
அதன் பின்னர், முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் நிதானித்து அணியை மீட்டதோடு, இருவரும் தலா 68 ரன்கள் எடுத்தனர்.
Pakistan beats Netherlands by 81 runs
பாஸ் டி லீடே அபாரம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ரிஸ்வான் மற்றும் ஷகீல் அவுட்டான பிறகு விக்கெட் மளமளவென சரிய, 49 ஓவர்களில் போராடி 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
நெதர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாஸ் டி லீடே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் விக்ரம்ஜித் சிங் (52) மற்றும் பாஸ் டி லீடே (67) அரைசதம் அடித்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பியதால், 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன் மூலம் 81 ரன்கள் வித்தியாசடத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் ஹரீஸ் ரவுப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சவுத் ஷகீல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.