Loading...
ஃபிஃபா மீது சைபர் தாக்குதல்: ஊழியர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து 12GB ஆவணங்களைத் திருடிய ஹேக்கர் குழு
ஃபிஃபா மீது சைபர் தாக்குதல்

ஃபிஃபா மீது சைபர் தாக்குதல்: ஊழியர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து 12GB ஆவணங்களைத் திருடிய ஹேக்கர் குழு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 27, 2026
02:27 pm

செய்தி முன்னோட்டம்

உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிஃபா தனது அமைப்பின் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் ஹேக்கர்கள் குறிப்பிட்ட அளவிலான தனிப்பட்ட மற்றும் வணிகத் தகவல்களை அங்கீகாரமின்றி அணுகியுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாகப் பெற்று வெளியிடுவது தனியுரிமைக்கு எதிரான கடுமையான மீறல் என ஃபிஃபா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்துச் சட்ட அமலாக்கத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் ஃபிஃபா தெரிவித்துள்ளது.

ஹேக்கர் குழு

ஊழியர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து 12GB ஆவணங்களைத் திருடிய ஹேக்கர் குழு

கடந்த நவம்பர் 19 அன்று ஹேண்ட்சம் பாய் ஹேக்கிங் கிளப் என்ற பெயரில் செயல்படும் ஹேக்கர் குழு எக்ஸ் தளத்தில் ஃபிஃபா கோப்புகளின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்தத் தரவுத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது.

பின்னர் அந்தக் கணக்கு எக்ஸ் தளத்தால் முடக்கப்பட்ட நிலையில் 12 ஜிகாபைட்டிற்கும் அதிகமான ஃபிஃபா உள் ஆவணங்கள் கசியவிடப்பட்டதற்கு அந்தக் குழு பொறுப்பேற்றுக் கொண்டது.

கணினி அமைப்பின் தொழில்நுட்பக் கோளாறைப் பயன்படுத்தாமல் ஃபிஃபா ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஹேக்கர்கள் இந்த ஆவணங்களை அணுகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆவணங்களின் அளவு

கசியவிடப்பட்ட ஆவணங்களின் அளவும் பிபிசி ஸ்போர்ட் பகுப்பாய்வும்

ஹேக்கர் குழு தாங்கள் நிதி ஆவணங்கள் நிர்வாகத் தகவல்கள் மற்றும் தனிப்பட்ட அடையாளப் பதிவுகளைத் திருடியதாகக் கூறினாலும் திருடப்பட்ட தரவுகளின் முழு அளவையோ அல்லது ஹேக்கர் குழுவின் அடையாளத்தையோ ஃபிஃபா இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

அதேசமயம் ஃபிஃபாவிடம் உள்ள மொத்தத் தரவுகளில் கசியவிடப்பட்ட ஆவணங்கள் 0.1%-க்கும் குறைவானதே என பிபிசி ஸ்போர்ட் பகுப்பாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் எந்தெந்த நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை ஃபிஃபா வெளியிடவில்லை.

ADVERTISEMENT

சைபர் தாக்குதல்

உலகக்கோப்பைப் பங்கு விற்பனை சர்ச்சைக்கு மத்தியில் வெடித்த சைபர் தாக்குதல்

2031 ஆம் ஆண்டு வரை தனது தலைவர் பதவியை நீட்டிக்க முயற்சித்து வரும் ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ கடுமையான நிர்வாக ஆய்வுகளை எதிர்கொண்டு வரும் நேரத்தில் இந்த சைபர் தாக்குதல் நடந்துள்ளது.

குறிப்பாக உலகக்கோப்பைப் போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு ரகசியமாக விற்க இன்ஃபான்டினோ திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான ஆவணங்களை இங்கிலாந்து கால்பந்து சங்கத் தலைவர் டெபி ஹெவிட் ரகசியக் காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுப் பார்வையிட்ட நிலையில் இந்தத் தரவுக் கசிவு மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

ADVERTISEMENT