
ENGvsSL : 156 ரன்களுக்கு ஆல் அவுட்; இலங்கையிடம் மண்டியிட்டது இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து 156 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களும் டேவிட் மாலன் 28 ரன்களும் எடுத்து அவுட்டாகிய நிலையில், மூன்றாவது இடத்தில் களமிறங்கிய ஜோ ரூட் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
England all out for 156 against Srilanka
லஹிரு குமார 3 விக்கெட் வீழ்த்தி அசத்தல்
ஜோ ரூட் வெளியேறிய நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு முனையில் பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று பொறுப்பாக ரன் சேர்த்தாலும், எதிர்முனையில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
பென் ஸ்டோக்ஸும் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லஹிரு குமார வீசிய பந்தில் அவுட்டானதால், இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு சுருண்டது.
இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், ஏஞ்செலோ மேத்யூஸ் மற்றும் கசுன் ரஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் மிகக்குறைந்த ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.