Loading...
வீடியோ காலில் அமைதியாக IPL ஓய்வை அறிவித்த தோனி; நெகிழ்ச்சித் தகவலைப் பகிர்ந்த CSK உரிமையாளர்
வீடியோ காலில் அமைதியாக IPL ஓய்வை அறிவித்த தோனி

வீடியோ காலில் அமைதியாக IPL ஓய்வை அறிவித்த தோனி; நெகிழ்ச்சித் தகவலைப் பகிர்ந்த CSK உரிமையாளர்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
04:17 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது ஐபிஎல் ஓய்வு முடிவை அணி நிர்வாகத்திடம் எவ்வளவு அமைதியாகவும் எளிமையாகவும் தெரிவித்தார் என்ற நெகிழ்ச்சியான பின்னணியை சிஎஸ்கே உரிமையாளர் ரூபா குருநாத் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் விடுவிப்பு மற்றும் ஏல வியூகம் குறித்துச் சனிக்கிழமை நடைபெற்ற வீடியோ கால் ஆலோசனையின் போது, விடுவிக்கப்பட வேண்டிய வீரர்கள் பட்டியலில் தனது பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு தோனி கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிஎஸ்கே அணி தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சனிக்கிழமை நடந்த அந்த உரையாடலை ரூபா குருநாத் நினைவுகூர்ந்துள்ளார்.

வீடியோ கால்

வீடியோ காலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்

"சனிக்கிழமை நாங்கள் வீடியோ காலில் அணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய வீரர்கள் மற்றும் அடுத்த சீசனுக்கான வியூகங்கள் குறித்து நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தோம். ஆலோசனையின் முடிவில் காசி விஸ்வநாதன் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது மிக அமைதியாகப் பேசிய தோனி, 'நீங்கள் என் பெயரையும் அதில் சேர்த்திருக்க வேண்டும்' என்றார்."

"உங்களால் நம்பவே முடியாது. தோனி அந்த வார்த்தையைச் சொன்ன அடுத்த நொடியே எங்களது வீடியோ கால் தானாகவே துண்டிக்கப்பட்டுவிட்டது. நான் மீண்டும் அவர்களை அழைத்து, 'பார்த்தீர்களா, அடுத்த சீசனில் நீங்கள் விளையாட மாட்டீர்கள் என்பதை இன்டர்நெட்டால் கூடத் தாங்கிக்கொள்ள முடியவில்லை' என்று கூறினேன்."

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT