அதிக முறை ஹெட் கோல் அடித்து சாதனை படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, அரபு கிளப் சாம்பியன்ஷிப் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் அல்-நாஸர் மற்றும் அல்-ஹிலால் இடையேயான போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். அல்-நாஸர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, இந்த போட்டியில் 2 கோல்களை அடித்ததன் மூலம், அல்-ஹிலால் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் அல்-நாஸர் அணி தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இதற்கிடையே, போட்டியின் 74வது நிமிடத்தில் முதல் கோலை அடித்த ரொனால்டோ, 145 முறை ஹெட் கோல்களை அடித்து அதிக ஹெட் கோல் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னர் ஜெர்மனி ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் 144 கோல்களுடன் முதலிடத்தில் இருந்தார்.