
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி மஹிகா கவுர் சாதனை
செய்தி முன்னோட்டம்
தனது 12 வயதில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) வேறொரு நாட்டிற்காக இரண்டாவது முறையாக 17 வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.
முதல் முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடிய மஹிகா கவுர், இந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக பங்கேற்று இரண்டு அணிகளுக்காக விளையாடிய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் டி20 போட்டியில் விளையாடும் லெவன் அணியில் இடம் பிடித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை செய்தார்.
மேலும், இதில் சாமரி அட்டபட்டுவை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்காக தனது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்.
mahika kaur background in cricket
யார் இந்த மஹிகா கவுர்?
தெற்கு இங்கிலாந்தில் பிறந்த மஹிகா கவுர், 2011இல் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்த பிறகு தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாகும் முடிவை எடுத்தார்.
அந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ராயல்ஸ் அணி விளையாடியது.
எம்எஸ் தோனி மற்றும் மிட்செல் ஸ்டார்க்கின் பரம ரசிகையாக மஹிகா கவுர், தனது குடும்பம் துபாய்க்கு இடம் பெயர்ந்தபோது அங்குள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியில் சேர்ந்தார்.
அதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2019 முதல் 2022 வரை அந்த அணிக்காக விளையாடிய அவர், 2023இல் இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 20 டி20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.