Loading...
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் நேரில் விருந்து
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் நேரில் விருந்து

எழுதியவர் Vasuki
Oct 05, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களை குவித்து இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இத்தொடரில் பங்கேற்றுப் பதக்கங்களை அறுவடை செய்து தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித்தந்த தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகள் தாயகம் திரும்பிய நிலையில், இன்று சென்னை விமான நிலையம் மற்றும் நேரு விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசின் சார்பில் தாரை தப்பட்டை முழங்க, மாலை அணிவித்து விளையாட்டு வீரர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

விருந்து

முதல்வர் விஜய் அளிக்கும் சிறப்பு விருந்து

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்துத் தாயகம் திரும்பியுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே ஊக்கப் பரிசுத் தொகைகளை அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் கொடியை உயர்த்திப் பிடித்த பதக்க நாயகர்களை நேரில் கௌரவிக்கும் விதமாக முதல்வர் விஜய் விரைவில் அனைவருக்கும் பிரம்மாண்ட விருந்தளிக்க உள்ளார்.

இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT