உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்
உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இருப்பவர் நோவக்நோவக் ஜோகோவிச். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா ஓபன் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னர்-இடம் தோல்வியை சந்தித்து, தொடரிலிருந்து வெளியேறினார். ஜோகோவிச், ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை 10 முறை வென்றவர். முதல் தடவையாக அரையிறுதியில் தோல்வி அடைந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதன் பின்னர் நோவக் நோவக் ஜோகோவிச் தனது சொந்த ஊரான செர்பியாவிற்கு திரும்பும் வழியில், அதே விமானத்தில் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வரை சந்தித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொழிலசார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார்.