மேற்கு வங்காளத்தில், நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ
செய்தி முன்னோட்டம்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ இரண்டு நாள் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
கால்பந்து விளையாட்டின் ரசிகர்களுக்கென பெயர்பெற்ற மேற்கு வங்காளத்திற்கு, பீலே, டியாகோ மரடோனா மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரை தொடர்ந்து, தற்போது ரொனால்டினோ வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஏற்கனவே தனது சமூகவலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த ரொனால்டினோ, பல விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், நவராத்திரி துர்கா பூஜையிலும் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று, ஸ்ரீபூமி துர்கா பூஜா மண்டலிற்கு வருகை தந்து, பூஜையில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து அவர், மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்திக்க உள்ளார்.
embed
நவராத்திரி விழாவில் ரொனால்டினோ
#WATCH | West Bengal: Brazilian football legend Ronaldinho visits Sreebhumi Durga Puja Pandal in Kolkata #Navratri pic.twitter.com/hCDwIkT1cn— ANI (@ANI) October 16, 2023