NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு
    புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு

    ஜெய் ஷாவின் பதவிக்கு வரப்போவது யார்? புதிய செயலாளரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ ஜனவரி 12இல் சிறப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 20, 2024
    04:30 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜனவரி 12 ஆம் தேதி சிறப்பு பொதுக் கூட்டத்தை (எஸ்ஜிஎம்) கூட்ட உள்ளது.

    இந்த கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெறுகிறது. ஜெய் ஷா மற்றும் ஆஷிஷ் ஆகியோர் ராஜினாமா செய்ததையடுத்து, செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக கூட்டம் நடைபெறுகிறது.

    முன்னதாக, 2019 முதல் ஐந்து ஆண்டுகள் பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷா, டிசம்பர் 1 ஆம் தேதி ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார்.

    மறுபுறம், ஷெலர் மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் கேபினட் அமைச்சரானார்.

    ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவிகளை வகிக்க அனுமதிக்காத லோதா கமிட்டி சீர்திருத்தங்களின்படி பிசிசிஐயில் இருந்து அவர்கள் ராஜினாமா செய்தனர்.

    இடைக்கால பொறுப்புகள்

    பிசிசிஐயில் இடைக்கால செயலாளர் மற்றும் பொருளாளர் பதவி

    அசாமின் தேவஜித் சைகியா பிசிசிஐயின் இடைக்கால செயலாளராக ஜெய் ஷாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு பணியாற்றி வருகிறார்.

    மேலும், பொருளாளர் பதவி இன்னும் காலியாகவே உள்ளது. செயலாளர் மற்றும் பொருளாளர் இருவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐசிசி தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்ட பிறகு, ரோஹன் ஜேட்லி (டிடிசிஏ தலைவர்) மற்றும் அனில் படேல் (குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர்) ஆகியோரில் ஒருவர் பிசிசிஐ செயலாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலமைப்பு தேவை

    பிசிசிஐயின் அரசியலமைப்புச் சட்டம் காலியான பதவிகளை நிரப்ப வேண்டும்

    பிசிசிஐயின் அரசியலமைப்புச் சட்டம் எந்த ஒரு காலிப் பதவியையும் 45 நாட்களுக்குள் சிறப்புப் பொதுக் கூட்டம் மூலம் நிரப்ப வேண்டும் என்று கூறுகிறது.

    வரவிருக்கும் எஸ்ஜிஎம் காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில சங்கத் தலைவர் ஒருவர் கூட்டத் தேதியை பிடிஐக்கு உறுதிப்படுத்தினார்.

    "ஆம், வியாழன் அன்று நடந்த அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, மாநில சங்கங்களுக்கு எஸ்ஜிஎம் தேதி குறித்த அறிவிப்பு அனுப்பப்பட்டது" என்று கூறினார்.

    இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதியை தேர்தல் அதிகாரியாக நியமிக்க உச்ச கவுன்சிலின் அனுமதியை பிசிசிஐ நாடியுள்ளது. அவர் எஸ்ஜிஎம்மில் தேர்தலை நடத்துவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    ஜெய் ஷா
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிசிசிஐ

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்கு பதிலாக கவுதம் கம்பீர் நியமனம் கவுதம் காம்பிர்
    சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள் சாம்பியன்ஸ் டிராபி
    முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளது பிசிசிஐ கிரிக்கெட்
    கௌதம் கம்பீரின் துணை பணியாளர்கள் பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்ததா? கவுதம் காம்பிர்

    ஜெய் ஷா

    ஜெய் ஷா ஐசிசி தலைவரானால் பிசிசிஐ செயலாளர் பதவி யாருக்கு? வெளியான புதுத் தகவல் கிரிக்கெட் செய்திகள்
    கிரெக் பார்க்லேவுக்குப் பதிலாக, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு பிசிசிஐ
    ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய் ஷா; பிசிசிஐயின் புதிய செயலாளர் ரேஸில் முன்னிலையில் ரோஹன் ஜெட்லி பிசிசிஐ
    ஐசிசி தலைவராக பதவியேற்றார் ஜெய் ஷா; பெண்கள் விளையாட்டு மற்றும் உலகளாவிய வளர்ச்சியில் கவனம் செலுத்த திட்டம் கிரிக்கெட் செய்திகள்

    கிரிக்கெட்

    டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகாட்ச ஸ்கோர் அடித்து பரோடா அணி சாதனை  டி20 கிரிக்கெட்
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக அறிவிப்பு ரோஹித் ஷர்மா
    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 3 கோரிக்கைகளை நிராகரிக்கும் ஐசிசி; சாம்பியன்ஸ் டிராபியின் கதி என்ன? ஐசிசி
    நவம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு ஜஸ்ப்ரீத் பும்ராவின் பெயர் பரிந்துரை; இரண்டாவது முறையாக விருதைப் பெறுவாரா? ஜஸ்ப்ரீத் பும்ரா

    கிரிக்கெட் செய்திகள்

    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு பார்டர் கவாஸ்கர் டிராபி
    பார்டர் கவாஸ்கர் டிராபி 2வது டெஸ்ட்: மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு; 180 ரன்களுக்கு சுருண்டது இந்தியா பார்டர் கவாஸ்கர் டிராபி
    டெஸ்ட் கிரிக்கெட்டில் கோல்டன் டக்கவுட் ஆன ஏழாவது இந்தியர் ஆனார் யஷஸ்வி ஜெய்ஸ்வால் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
    பிங்க்-பால் டெஸ்டில் அதிவேக சதம்; தனது சாதனையை தானே முறியடித்தார் டிராவிஸ் ஹெட் டெஸ்ட் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025