Loading...
இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்: பிசிசிஐ அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்

இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்: பிசிசிஐ அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 19, 2026
04:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த அஜித் அகர்கர் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் மற்றும் மூப்பு அடிப்படையில் பிரக்யான் ஓஜா இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரக்யான் ஓஜா (தலைவர்), சிவ சுந்தர் தாஸ், ஆர்.பி. சிங், அஜய் ரத்ரா மற்றும் புதிதாக இணைந்துள்ள ரமேஷ் பவார் ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவாக இது செயல்படும்.

விவரங்கள்

தேர்வுகுழு உறுப்பினர்கள் விவரங்கள்

இந்திய அணிக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா, டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 113 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

முன்னாள் இந்தியச் சுழற்பந்து வீச்சாளரும், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவருமான ரமேஷ் பவார் தேர்வுக்குழுவின் புதிய உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்பே அடங்கிய கிரிக்கெட் உபதேசக் குழு (CAC) நடத்திய நேர்காணலுக்குப் பிறகே ரமேஷ் பவாரின் பெயர் ஒருமனதாகப் பரிந்துரைக்கப்பட்டது.

ரமேஷ் பவார் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இவரின் பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் அணி ஆசியக் கோப்பை வென்றதுடன், காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT