
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் இந்தியா ஏ இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 20 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
வங்காள தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இதில் பல முக்கிய உள்நாட்டு வீரர்கள் மற்றும் சில சர்வதேச வீரர்கள் உள்ளனர்.
சமீபத்திய பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணியில் அதிக ரன்கள் எடுத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸுடனான தனது ஐபிஎல் கடமைகளை முடித்த பிறகு முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் இருந்து அணியில் இணைவார்.
உள்நாட்டு சீசன்களில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து, மூத்த வீரர் கருண் நாயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வீரர்கள்
இந்தியா ஏ அணி வீரர்கள் பட்டியல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த பிறகு, இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக சீனியர் அணிக்கு இதிலிருந்து சில வீரர்களை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
தொடரின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.