மே 1ம் தேதி வரை சிஎஸ்கே அணிக்காக விளையாட வருகிறார் வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான்
செய்தி முன்னோட்டம்
வங்கதேச வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்து வீச்சாளருமான முஸ்தஃபிசுர் ரஹ்மான் விசா பிரச்னை காரணமாக ஐபிஎல் தொடரின் நடுவே சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.
அதோடு அவர், வங்கதேசம் மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கு இடையேயான டி 20 தொடரில் விளையாட உள்ளதால் அவர் வங்கதேசத்திற்கு திரும்பினார்.
இந்த நிலையில், முஸ்தஃபிசுர் ரஹ்மானை வரும் மே 1ஆம் தேதி வரையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் சிஎஸ்கே மற்றும் பிசிசிஐ அனுமதி பெற்றுள்ளது.
இதுவரையில் சிஎஸ்கே அணி விளையாடிய 6 போட்டிகளில் முஸ்தஃபிசுர், 5 போட்டிகளில் விளையாடி, 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
அதில் குறிப்பிடத்தக்க வகையில் முதல் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் அவர்.
embed
சிஎஸ்கே அணிக்கு விளையாட வருகிறார் முஸ்தஃபிசுர்
#IPLUpdate | மே 1ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி வரை முஸ்தஃபிசுர் விளையாடுவார்!#SunNews | #CSK | #MustafizurRahman | @Mustafiz90 | @ChennaiIPL pic.twitter.com/YtmE0iuY13— Sun News (@sunnewstamil) April 16, 2024