வங்கதேசம் vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாளிலேயே 15 விக்கெட்டுகள் அவுட்
செய்தி முன்னோட்டம்
டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன.
முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
ஆனால், நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 66.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிட்செல் சான்ட்னர் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதற்கிடையே, நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுத்தி இந்த போட்டியில் 5.2 ஓவர்கள் வீசி ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
New Zealand lost 5 wickets in Day 1
நியூசிலாந்து கிரிக்கெட் அணி தடுமாற்றம்
வங்கதேசத்தை முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருட்டி நியூசிலாந்து கிரிக்கெட் அணி பவுலர்கள் அசத்தினாலும், அந்த அணியின் பேட்டர்கள் சிராப்பக செயல்படவில்லை.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 55 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் டேரில் மிட்செல் 12 ரன்களுடனும் கிளென் பிலிப்ஸ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச பந்துவீச்சாளர்களான மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக, முதல் போட்டியில் நியூசிலாந்து தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் எனும் நிலையில், நெருக்கடியான நிலையில் உள்ளது.