'மகன் சஞ்சயின் முதல் படம்!' கமலா திரையரங்கில் சிக்மா பார்த்த தாய் சங்கீதா, தங்கை திவ்யா; உற்சாக வீடியோ
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள சிக்மா என்ற அதிரடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார். அக்டோபர் 2 அன்று உலகளவில் திரையரங்குகளில் சிக்மா திரைப்படம் வெளியான நிலையில், சென்னையின் பிரபல கமலா திரையரங்கில் நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சியைக் (FDFS) காண ஜேசன் சஞ்சய்யின் தாயார் சங்கீதா மற்றும் தங்கை திவ்யா ஆகியோர் நேரில் வருகை தந்து படம் பார்த்துள்ளனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
கமலா திரையரங்கு
திரையரங்கில் ஜேசன் சஞ்சய்க்கு குடும்பத்தினரின் நெகிழ்ச்சியான ஆதரவு
25 வயதாகும் ஜேசன் சஞ்சய், திரைத்துறையில் இயக்குனராக தனது முதல் பயணத்தைத் தொடங்குவது அவரது குடும்பத்தினருக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் அரசியல் பணிகளில் தீவிரமாக இருக்கும் நிலையில், தாயார் சங்கீதாவும் தங்கை திவ்யாவும் நேரில் வந்து படம் பார்த்தது ஜேசன் சஞ்சய்க்கு மிகப்பெரிய மன பலத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.
இவர்களுடன் இயக்குனர் ஜேசன் சஞ்சய்யும் திரையரங்கிற்கு உடன் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
ஜேசன் சஞ்சயின் சிக்மா பார்க்க வந்த முதல் அமைச்சர் தளபதி விஜய் மனைவி மகள் 😍🥰🫶 pic.twitter.com/jmDN7PsIHK
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) October 2, 2026
அப்பா, அம்மா, தங்கைக்கு நன்றி
ஜேசன் சஞ்சயின் உணர்ச்சிப்பூர்வ பேச்சு
முன்னதாக நடைபெற்ற சிக்மா திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தினருக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நன்றி தெரிவித்தார்.
"எனது திரைப்படப் பயணத்திற்கு எப்போதும் துணையாக இருக்கும் எனது அம்மாவிற்கு நன்றி.
இன்று முதலமைச்சராக உள்ள எனது தந்தைக்கு நன்றி மற்றும் எனது அன்புத் தங்கை திவ்யாவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்." எனக் கூறி தனது நன்றியை வெளிப்படுத்தினார்.
லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே தற்போது நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது.