Loading...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனை படைத்த சுருச்சி - கமல்ஜீத் ஜோடி
துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனை படைத்த சுருச்சி - கமல்ஜீத் ஜோடி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்று ஆசிய சாதனை படைத்த சுருச்சி - கமல்ஜீத் ஜோடி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2026
10:03 am

செய்தி முன்னோட்டம்

2026 ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் ஜோடி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், இந்திய ஜோடி 484.6 புள்ளிகள் குவித்து முதலிடத்தைப் பிடித்ததுடன், புதிய ஆசிய சாதனையையும் தன்வசப்படுத்தியது. இப்போட்டியில் 478.0 புள்ளிகளுடன் தென்கொரியாவின் சுஹியோன் ஹாங் - கேயூன் சூ ஜோடி வெள்ளிப் பதக்கத்தையும், 415.8 புள்ளிகளுடன் ஈரான் ஜோடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. தென்கொரிய ஜோடியை விட 6.6 புள்ளிகள் அதிகம் பெற்று இந்திய இணை தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிருபித்தது.

முன்னேற்றம்

தகுதிச் சுற்றில் அசத்தல் முன்னேற்றம்

முன்னதாக நடைபெற்ற தனிநபர் பிரிவுகளில் ஏமாற்றத்தைச் சந்தித்த சுருச்சி - கமல்ஜீத் இணை, கலப்பு இரட்டையர் தகுதிச் சுற்றில் அபாரமாக மீண்டு வந்தது.

முதல் சுற்றில் 196 புள்ளிகளும், இரண்டாவது சுற்றில் 195 புள்ளிகளும் பெற்ற இவர்கள், இறுதிச் சுற்றில் 196 புள்ளிகள் என மொத்தம் 587 புள்ளிகள் (29 இன்னர் 10s உட்பட) குவித்து முதலிடத்துடன் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

தனிநபர் மற்றும் கூட்டுப் பிரிவுகளில் பதக்க வாய்ப்பை இழந்த இந்தியத் துப்பாக்கிச்சுடுதல் அணிக்கு, இந்தத் தங்கம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

நடப்பு ஆசிய விளையாட்டுத் தொடரில் மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றதைத் தொடர்ந்து, இந்தியாவிற்குச் கிடைக்கும் 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

ADVERTISEMENT