Loading...
44 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
44 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

44 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
07:08 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்ற பரபரப்பான மகளிர் ஹாக்கி இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன் கடந்த 1982 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில்தான் இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கம் வென்றிருந்தது. தற்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆசியாவின் சாம்பியனாக உருவெடுத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

ஒலிம்பிக் தகுதி

லால்ரெம்சியாமி அடித்த வெற்றி கோல் & ஒலிம்பிக் தகுதி

போட்டியின் முதல் கால்பாதியிலேயே இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமி அடித்த கோல் இந்தியாவிற்கு 1-0 என முன்னிலையை பெற்றுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் எஞ்சிய மூன்று காலிறுதிப் பகுதிகளிலும் சீன அணியின் தொடர் தாக்குதல்களை இந்திய அணியின் வலுவான தடுப்பாட்டமும், கேப்டன் சவிதா புனியாவின் சிறந்த கோல்கீப்பிங்கும் முறியடித்தன.

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நேரடித் தகுதியையும் இந்திய அணி உறுதி செய்துள்ளது.

பதக்கங்கள்

16 ஆக உயர்ந்த இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை

மகளிர் ஹாக்கியில் கிடைத்துள்ள இந்த தங்கத்தின் மூலம், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 16 ஆகவும், ஒட்டுமொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கை 76 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆசிய விளையாட்டின் 13-வது நாளில் மகளிர் ரீகர்வ் வில்வித்தை தங்கம், குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹெய்ன், பர்வீன் ஹூடா, அங்குஷ் பங்கால் தங்கப் பதக்கங்கள் மற்றும் மல்யுத்தத்தில் சுஜீத் கல்கால் தங்கம் என இந்திய அணி அடுத்தடுத்து பதக்கங்களை வாரிக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT