ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தது இந்திய ஹாக்கி அணி
செய்தி முன்னோட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டி 2023இல் ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்றது.
மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், அபிஷேக் மற்றும் அமித் ரோஹிதாஸ் ஆகியோர் கோல் அடித்து ஜப்பானை வீழ்த்தினர்.
போட்டியின் முதல் பாதி முழுவதும் ஜப்பான் தனது தற்காப்பு ஆட்டத்தை வலுவாக வைத்திருந்ததால், கோல் அடிக்க முடியாமல் திணறிய இந்திய வீரர்கள், இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து 4 கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை இந்தியா உறுதி செய்தது.
முன்னதாக, இந்தியா தனது குழுநிலை ஆட்டத்திலும் ஜப்பானை 4-2 என்ற கணக்கில் தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING || ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,
— Thanthi TV (@ThanthiTV) October 6, 2023
ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்
ஜப்பானை 5 - 1 என்ற கோல் கணக்கில் வென்றது இந்தியா #hockey #india #japan pic.twitter.com/9xTPv8kucV