Page Loader
மைதானத்தில் நடுவருடன் மோதல்; ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ்
ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா அட்வைஸ்

மைதானத்தில் நடுவருடன் மோதல்; ஹர்மன்ப்ரீத் கவுருக்கு முன்னாள் கேப்டன் அட்வைஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2023
12:17 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் சமீப காலமாக நல்ல வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியதோடு, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான அஞ்சும் சோப்ரா, 157 போட்டிகளில் (12 டெஸ்ட், 127 ஒருநாள், 18 டி20) இந்தியாவுக்காக விளையாடி உள்ளார். இதில் 41 போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், ஊடகம் ஒன்று அளித்த நேர்காணலில், சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச தொடரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் செயல்பாடு குறித்து பேசினார். அங்கு, இந்தியா டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை 1-1 என சமன் செய்தது.

harmanpreet creates controversy

சர்ச்சையான ஹர்மன்ப்ரீத் கவுரின் செயல்பாடுகள்

தனக்கு அவுட் கொடுக்கப்பட்டதை எதிர்த்து கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஸ்டம்பை உடைத்து, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையானது. மேலும் போட்டிக்குப் பிந்தைய விளக்கக்காட்சியிலும் நடுவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். இதனால் ஐசிசி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் எனக் கூறப்படும் நிலையில், முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, ஹர்மன்ப்ரீத் கவுர் ஆவேசம் அடங்கி அமைதியான பிறகு, நடந்தவற்றை திரும்பி பார்த்து, தனது கருத்து வேறுபாட்டை காட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், வங்கதேச தொடரில் ஒப்பீட்டளவில் இந்திய அணி சரியாக செயல்படவில்லை எனக் கூறியுள்ள அஞ்சும் சோப்ரா, ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முன் அணியில் உள்ள ஓட்டைகளை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.