Loading...
U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: காயத்துடன் அரைசதம் அடித்து விராட் கோலி பாணியில் கொண்டாடிய ஆர்யவீர் சேவாக்
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் காயத்துடன் அரைசதம் அடித்து கோலி பாணியில் கொண்டாடிய ஆர்யவீர்.

U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: காயத்துடன் அரைசதம் அடித்து விராட் கோலி பாணியில் கொண்டாடிய ஆர்யவீர் சேவாக்

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
05:22 pm

செய்தி முன்னோட்டம்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு எதிராகக் கையில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக விளையாடி அரைசதம் விளாசிய இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆர்யவீர் சேவாக், நட்சத்திர வீரர் விராட் கோலியின் தனித்துவமான பாணியில் கொண்டாடி ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக்கின் மகனான 15 வயது ஆர்யவீர், இறுதிப்போட்டியில் 58 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கான பயணத்திற்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். இவரது இந்தத் துணிச்சலான ஆட்டம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காயம்

காயத்தை தாண்டி பவுண்டரி விளாசிய துணிச்சல்

இறுதிப்போட்டியில் 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசிய பந்து ஆர்யவீர் சேவாக்கின் முன்கையில் பலமாகத் தாக்கியதில், வலியால் துடித்த அவருக்கு மைதானத்திலேயே உடனடி மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கட்டுப் போடப்பட்டது.

ஆனால், ஓய்வறைக்குத் திரும்ப மறுத்து தொடர்ந்து பேட்டிங் செய்த ஆர்யவீர், அடுத்த பந்திலேயே அபாரமான கட் ஷாட் மூலம் பவுண்டரி விளாசித் தனது அசாத்திய மன உறுதியையும், களத்தில் நின்று போராடும் குணத்தையும் எதிரணிக்கு உணர்த்தினார்.

97 ரன்கள் கூட்டணி

விராட் கோலி பாணி கொண்டாட்டம்

வலியுடன் விளையாடியபோதிலும் பாகிஸ்தான் பந்துவீச்சைச் சிதறடித்த ஆர்யவீர், 50 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

2018-ஆம் ஆண்டு பெர்த் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பிறகு விராட் கோலி வெளிப்படுத்திய பேட்டைப் பேசவைக்கும் புகழ்பெற்ற சைகையைச் செய்து காட்டித் தனது அரைசதத்தைக் கொண்டாடினார்.

கேப்டன் லக்ஷயா ராய்சந்தானியுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில், 61 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்திருந்த ஆர்யவீர், நிகாப் ஷபிக் பந்தில் லாங்-ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT