NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்
    தன்னுடைய 98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    05:11 pm

    செய்தி முன்னோட்டம்

    டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனை படைத்துள்ளார்.

    ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின்.

    இவரின் இந்த சாதனைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் தனுஷ் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அஸ்வின், கடந்த விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தவறியது.

    இந்த நிலையில் தான், ராஜ்கோட்டில் முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடி வரும் இந்த நேரத்தில், அஸ்வின் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் கூட்டணியை முறியடித்து சாதனை

    முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணியின், ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

    அதில் பென் டக்கெட் அரைசதம் கடந்த நிலையில், ஜாக் க்ராவ்லி, 15 ரன்கள் எடுத்திருந்தார்.

    அந்த கூட்டணியை உடைக்க வேண்டி, அஸ்வின் பந்து வீச்சில் இறங்கினார்.

    அதன்படி, தனது இரண்டாவது ஓவரில் ஜாக் க்ராவ்லி வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற சாதனையை படைத்தார்.

    தன்னுடைய 98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    முன்னதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வர் வாழ்த்து 

    Breaking Records & Crafting Dreams, that's Chennai's own boy, @ashwinravi99!

    With every turn, he weaves a tale of determination and skill, marking a truly SPINtacular milestone!

    Hats off to Ashwin's magical spin, masterfully securing his 500th Test wicket in the annals of… pic.twitter.com/5mSv3Wm5Rd

    — M.K.Stalin (@mkstalin) February 16, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    தனுஷ் வாழ்த்து 

    Congratulations @ashwinravi99 on this incredible achievement. Thank you for making us proud #ashwin500

    — Dhanush (@dhanushkraja) February 16, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    ஜெய்ஷா வாழ்த்து

    Hats off to @ashwinravi99 for achieving an incredible feat of securing 500 test wickets. Your outstanding talent and unwavering commitment have left a lasting mark in cricketing history.@BCCI pic.twitter.com/Hxrr1bP71K

    — Jay Shah (@JayShah) February 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அஸ்வின் ரவிச்சந்திரன்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    டெஸ்ட் மேட்ச்

    சமீபத்திய

    சூழும் போர் மேகத்தால் அனைத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ரத்தா? யுஜிசி அறிக்கை யுஜிசி
    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்

    அஸ்வின் ரவிச்சந்திரன்

    யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்? இந்தியா
    பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அஸ்வினை கண்டு மரண பீதியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்! டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    வாய்ப்பே இல்லை! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கருத்து! கிரிக்கெட்
    டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியர்! அஸ்வின் சாதனை! கிரிக்கெட்

    கிரிக்கெட்

    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் மல்யுத்தம்
    கடைசி போட்டிக்கு முன்னதாக டெஸ்ட் தொப்பியை தொலைத்த டேவிட் வார்னர் டேவிட் வார்னர்
    ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் 3வது டெஸ்ட் : விளையாடும் லெவனில் மாற்றம் செய்யாத ஆஸ்திரேலியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி
    அணித் தேர்வில் ரவி சாஸ்திரி-விராட் கோலி தான் பெஸ்ட்; முன்னாள் வீரர் கருத்து இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி டி20 கிரிக்கெட்
    தேர்வுக்குழு தலைவராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? பாகிஸ்தானில் புது சர்ச்சை கிரிக்கெட்

    டெஸ்ட் மேட்ச்

    வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோ சாலமன் காலமானார்; இவரது பின்னணி என்ன? வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    SAvsIND: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ஷமி விலகினார், ஒருநாள் போட்டிகளிலிருந்து சாஹர் விலகல் இந்திய கிரிக்கெட் அணி
    இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷான் நீக்கம் இந்தியா vs தென்னாப்பிரிக்கா
    ரீவைண்ட் 2023 : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முக்கிய தருணங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025