பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்
மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா 76 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்தது. மனு பாக்கர் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 117 வீரர்கள் பங்கேற்ற நிலையில் நிலையில், இந்தியா மொத்தமாக 5 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை கைப்பற்றியது. இது ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது சிறப்பான செயல்பாடாகும். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்ததே ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற அதிக பதக்கமாகும்.
பதக்கம் வென்ற இந்தியர்கள்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மொத்தம் 69 பதக்கப் போட்டிகளில் பங்கேற்றது. இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட லக்ஷ்யா சென், மீராபாய் சானு, வினேஷ் போகட் (இறுதிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்) மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் பதக்கம் எதுவும் இல்லாமல் திரும்பினர். அதேநேரத்தில் மனு பாக்கர் உள்ளிட்ட புதிய வீரர்கள் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். பதக்கம் வென்றவர்கள்: மனு பாக்கர் (இரண்டு வெண்கலம், துப்பாக்கிச் சுடுதல்), சரப்ஜோத் சிங் (வெண்கலம், துப்பாக்கிச் சுடுதல்), ஸ்வப்னில் குசேலே (வெண்கலம், துப்பாக்கிச் சுடுதல்), இந்திய அணி (வெண்கலம், ஹாக்கி), நீரஜ் சோப்ரா (வெள்ளி, ஆண்கள் ஈட்டி எறிதல்), மற்றும் அமன் ஷெராவத் (வெண்கலம், ஆண்கள் மல்யுத்தம்).