NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO
    ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கிய இந்தியா

    ட்ரக்கோமாவை முழுவதுமாக நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டிய WHO

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 09, 2024
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பொது சுகாதார பிரச்சனையாக நாட்டை அச்சுறுத்தி வந்த ட்ரக்கோமாவை நீக்கியதற்காக இந்தியாவை பாராட்டியுள்ளது.

    இதன் மூலம், நேபாளம் மற்றும் மியான்மருக்கு அடுத்தபடியாக, தனது பிராந்தியத்தில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

    WHO இன் 77வது பிராந்திய குழு அமர்வில் 'பொது சுகாதார விருதுகள்' நிகழ்வின் போது இந்த அங்கீகாரம் அறிவிக்கப்பட்டது.

    WHO தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநரான சைமா வாஸெட், ட்ரக்கோமாவை அகற்றுவதில் இந்தியாவின் வெற்றியை அதன் அரசாங்கத்தின் வலுவான தலைமை மற்றும் உறுதியான சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாராட்டினார்.

    நோய் கண்ணோட்டம்

    டிராக்கோமா: தொற்று குருட்டுத்தன்மைக்கு ஒரு முக்கிய காரணம்

    ட்ரக்கோமா, முக்கியமாக மோசமான சுகாதாரம் மற்றும் அசுத்தமான நீர் விநியோகத்தால் ஏற்படும் கிளமிடியல் தொற்று, உலகளவில் தொற்று குருட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாகும்.

    இந்நோய் பாதிக்கப்பட்ட நபரின் கண், மூக்கு அல்லது தொண்டை சுரப்புகளின் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது மறைமுகமாக ஈக்கள் மூலமாகவோ பரவுகிறது.

    இந்த பொது சுகாதார பிரச்சினையை இந்தியா நீக்குவது தேசிய சுகாதார தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

    சுகாதார மைல்கற்கள்

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை அகற்றுவதில் பூட்டானின் முன்னேற்றத்தை WHO அங்கீகரிக்கிறது

    இந்தியாவின் அங்கீகாரத்துடன், 2030ஆம் ஆண்டுக்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக அகற்றுவதற்கான இடைக்கால இலக்குகளை பூடான் அடைந்ததற்காக WHO பாராட்டியது.

    இதன்மூலம் தனது பிராந்தியத்தில் இந்த முக்கியமான மைல்கல்லை எட்டிய முதல் நாடு என்ற பெருமையை பூட்டான் பெற்றுள்ளது.

    ஹியூமன் பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) எதிரான விரிவான தடுப்பூசி, கர்ப்பப்பை வாய் நோய்க்கான பெண்களின் வழக்கமான பரிசோதனை மற்றும் அதனுடன் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஆகியவை இடைக்கால இலக்குகளில் அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக சுகாதார நிறுவனம்
    இந்தியா
    நேபாளம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உலக சுகாதார நிறுவனம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலக செய்திகள்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக செய்திகள்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா

    இந்தியா

    கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு; அமலாக்கத்துறை முன் ஆஜராக முன்னாள் இந்திய கேப்டனுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை
    இவி9 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது கியா மோட்டார்ஸ்; விலை ரூ.1.3 கோடி மட்டுமே! கியா
    சத்தீஸ்கரில் போலி எஸ்பிஐ வங்கி கிளை கண்டுபிடிப்பு; பல லட்சங்களை இழந்த மக்கள் எஸ்பிஐ
    அமெரிக்காவின் மத சுதந்திர அறிக்கையை நிராகரித்தது இந்தியா; வெளியுறவு அமைச்சகம் பதிலடி அமெரிக்கா

    நேபாளம்

    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் இந்தியா
    இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு பிரதமர் மோடி
    நேபாளத்தில் 5 வெளிநாட்டு பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம் உலகம்
    மாயமான நேபாள ஹெலிகாப்டர், மரத்தில் மோதி விபத்து; 5 சடலங்கள் மீட்பு உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025