தடையை உறுதி செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்; அமெரிக்காவில் டிக்டாக் இழுத்து மூடப்படுகிறதா?
செய்தி முன்னோட்டம்
டிக்டாக் செயலியைத் தடைசெய்யும் புதிய சட்டம் சேவை வழங்குநர்களுக்கு அபராதம் விதிக்காது என்று ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்காவிட்டால், ஜனவரி 19 அன்று அமெரிக்காவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக டிக்டாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்டாக்கின் சீனாவைத் தளமாகக் கொண்ட தாய் நிறுவனமான பைட் டான்ஸ், இந்த செயலியை விற்க வேண்டும் அல்லது தேசிய பாதுகாப்புக் காரணங்களால் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்ற சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்தது.
சட்ட அமலாக்கத்தில் தெளிவுபடுத்தத் தவறியதற்காக நிர்வாகத்தையும் நீதித் துறையையும் டிக்டாக் விமர்சித்தது.
இது 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது என்று நிறுவனம் கூறுகிறது. பைட் டான்ஸ் டிக்டாக்கை விற்க மறுத்துவிட்டது.
பைடன் நிர்வாகம்
பைடன் நிர்வாகத்தின் முடிவு
ஜோ பைடன் நிர்வாகம் தடையை உடனடியாக அமல்படுத்த மாட்டோம் என்று சமிக்ஞை செய்தாலும், இந்த விவகாரம் தடையை எதிர்க்கும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் கையில் வரக்கூடும்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், தீர்வைத் தேடப்போவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆப் ஸ்டோர்களில் இருந்து டிக்டாக்கை அகற்றுவதை சட்டம் கட்டாயப்படுத்துகிறது, மீறல்களுக்கு ஒரு பயனருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
டிக்டாக்கின் சிஇஓ, ஷூ ஷியூ, ஒரு தீர்மானத்தைக் கண்டறிய டிரம்பின் நிர்வாகத்துடன் ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தத் தடையானது அமெரிக்க நிறுவனங்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் போன்ற போட்டியாளர்களுக்குப் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.