இந்தியாவில் வெளியானது போகோ M6 ப்ரோ 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்
இந்தியாவில் பட்ஜெட் பிரிவில், 'M6 ப்ரோ 5G' என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சீனாவைச் சேர்ந்த போகோ நிறுவனம். என்னென்ன வசதிகளைக் கொண்டிருக்கிறது இந்த M6 ப்ரோ? 90Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங்குடன் கூடிய 6.79 இன்ச் டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது M6 ப்ரோ. பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் 3 பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்பக்கம் 50MP+2MP AI டூயல் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 8MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. IP53 ரேட்டிங்குடன், பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்களையும் பெற்றிருக்கிறது இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன். ஆண்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு, இரண்டு இயங்குதள அப்டேட்களும், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறது போகோ.
போகோ M6 ப்ரோ 5G: ப்ராசஸர் மற்றும் விலை
இந்தப் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது போகோ. இத்துடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5000mAh பேட்டரியையும் வழங்கியிருக்கிறது போகோ. இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியன்ட்களில் இந்தப் புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இதன் அடிப்படை 4GB+64GB வேரியன்டானது ரூ.10,999 விலையில் வெளியாகியிருக்கிறது. மற்றொரு 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டானது ரூ.12,999 விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 9 நண்பகல் 12 மணி முதல் இதன் விற்பனை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதனை ஃப்ளிப்கார்ட் தளத்தின் மூலம் மட்டுமே விற்பனை செய்யவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது போகோ.