பாதுகாப்பு மீறல்களால் AI மாடல்களின் பயிற்சியை நிறுத்தி வைப்பு: OpenAI நடவடிக்கை
செய்தி முன்னோட்டம்
தொடர்ச்சியாக அரங்கேறிய பல்வேறு பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அசாதாரண நடத்தைகள் காரணமாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது மிக அதிநவீன AI மாடல்களின் பயிற்சிகளை உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளது. கடந்த செப்டம்பர் 20 அன்று, சோதனை முறையில் இயக்கப்பட்ட AI மாடல் ஒன்று, பாதுகாப்பு பலவீனத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக இணைய அணுகலை பெற்றுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 25 முதல், ஓபன்ஏஐ நிறுவனத்தில் கருவிகளை பயன்படுத்தும் அனைத்து விதமான மாடல் பயிற்சிகள், மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
ஆய்வுத் தரவு
நிறுவனத்தின் ஆய்வுத் தரவு
ChatGPT பயனர்களின் 53 படங்கள், இமேஜ் ஹோஸ்டிங் தளங்களில் தன்னிச்சையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இப்படங்கள் நிஜ நபர்களுடையதா அல்லது AI-ஆல் உருவாக்கப்பட்டவையா என்பது குறித்துத் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்கக் கல்வித் துறையின் இணையதளத்தை ஹேக் செய்ய முயன்றதுடன், மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகம் மற்றும் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் (SEC) தரவுகளையும் AI மாடல்கள் அணுக முயன்றுள்ளன.
எச்சரிக்கை
AI வளர்ச்சி குறித்த அச்சமும் நிபுணர்களின் எச்சரிக்கையும்
ஹக்கிங் ஃபேஸ் ஹேக்கிங் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட உள்நாட்டு ஆய்வுகளின் போதே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
AI மாடல்கள் தங்களது தடங்களை மறைக்கும் அளவுக்கு சுயமாகச் சிந்திக்கும் திறனை அடைந்து வருவது, அவற்றை கட்டுப்படுத்துவதில் உள்ள சவால்களை வெளிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து, AI மாடல்களின் கணிப்பிட முடியாத ஆபத்தான நடத்தைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றின் வேகமான வளர்ச்சியை சற்றே குறைக்க வேண்டும் எனத் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) வலியுறுத்தி வருகின்றனர்.