OpenAI-இன் GPT-6 மாடல் உலகளவில் வெளியீடு: இன்டராக்டிவ் UI மற்றும் அதிவேக ரீசனிங் அம்சங்கள் அறிமுகம்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ, தனது புதிய 'GPT-6' மாடலை சாட்ஜிபிடி தளத்தில் உலகளாவிய அளவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. கட்டணச் சந்தாதாரர்களை தொடர்ந்து, இலவசப் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கத் தொடங்கியுள்ளது. ஜிபிடி-6 மாடலின் முதன்மை அம்சமாக 'இன்டெலிஜென்ட் UI' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் டெக்ஸ்ட் மட்டுமின்றி, ஊடாடும் பட்டன்கள், வரைபடங்கள் மற்றும் கால்குலேட்டர் கருவிகளை உரையாடலின் போதே சாட்ஜிபிடி உடனடியாக உருவாக்கும். மேலும், முந்தைய ஜிபிடி-5.6 மாடலை விட வேகமாகச் சிந்தித்து, தரவுகளைத் தேடித் தரும்போதே உடனடியாக பதிலளிக்கத் தொடங்கும் திறன் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
இணையத் தேடல் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு
இணைய வழித் தேடல்களில் ஜிபிடி-6 இன்ஸ்டன்ட் மாடல், முந்தைய பதிப்பை விட 44% அதிவேகமாகச் செயல்படுகிறது.
இணையத் தேடல் எப்போது தேவை என்பதைத் துல்லியமாக கண்டறிந்து தகவல்களை இது தொகுத்தளிக்கும்.
அத்துடன், சைபர் தாக்குதல்கள் மற்றும் உயிரியல் அச்சுறுத்தல்கள் தொடர்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும் இப்புதிய பதிப்பில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வாரத்திற்கு 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வரும் நிலையில், பிளஸ் மற்றும் புரோ சந்தாதாரர்களுக்கு GPT-6 Sol மாடலும், இலவச பயனர்களுக்கு GPT-6 Luna மாடலும் வழங்கப்படவுள்ளது.
மென்பொருட்கள் பயனர்களின் தேவைக்கேற்ப இயங்கும் எதிர்கால இலக்கை நோக்கி இப்புதிய அப்டேட் முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
GPT-6 and Intelligent UI, now rolling out in ChatGPT for everyone.
— OpenAI (@OpenAI) October 7, 2026
Intelligent UI in ChatGPT delivers fast, interactive answers that make everyday questions more visual, complex topics easier to grasp, and interactive tools for your task available on the spot. pic.twitter.com/XL2gDCPBwG