
ஸ்பேஸ்சூட் பிரச்சனைகளால் ISS ஸ்பேஸ் வாக் தாமதம்
செய்தி முன்னோட்டம்
விண்வெளி வீரர் டிரேசி கால்டுவெல் டைசனின் விண்வெளி உடையில் நீர் கசிவு ஏற்பட்டதால், சர்வதேச விண்வெளி நிலையத்தில்(ISS) அடுத்த திட்டமிடப்பட்ட ஸ்பேஸ் வாக்கை ஜூலை இறுதி வரை நாசா ஒத்திவைத்துள்ளது.
ஜூன் 24, 2024 அன்று நடந்த விண்வெளி நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட கசிவு காரணமாக, விண்வெளி வீரர் மைக் பேரட் மற்றும் விண்வெளி வீரர் டைசன் ஆகியோர் 31 நிமிடங்களில் எக்ஸ்ட்ராவெஹிகுலர் செயல்பாட்டை (EVA) முடித்து கொண்டனர்.
அவர்கள் சுமார் 6.5 மணி நேரம் வேலை செய்ய வேண்டி இருந்த நிலை, விண்வெளி உடையில் ஏற்பட்ட நீர் கசிவால், அவர்கள் வெறும் 31 நிமிடங்களில் வெளியேறிவிட்டனர்.
நாசா
அடுத்த விண்வெளிப் பயணத்திற்கான ஆய்வு மற்றும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
இந்நிலையில், ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்தின் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மேலாளர் பில் ஸ்பெட்ச், ஜூலை இறுதி வரை இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நீர் கசிவுக்கான காரணத்தைப் புரிந்து கொள்ள அவ்வளவு நாட்கள் ஆகக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் விண்வெளி நடைப்பயணத்தில் மீண்டும் டைசன் மற்றும் பேரட் இடம்பெறுவார்கள்.
"வன்பொருள் மாற்றீடுகள் மற்றும் நிறுவல்கள், அறிவியல் கியரில் எதிர்கால மேம்படுத்தல்களுக்கான தயாரிப்புகள் மற்றும் நிலைய குழாய்களின் புகைப்பட ஆய்வுகள்" ஆகியவற்றை செய்ய அவர்கள் ஸ்பெஸ் வாக் செய்கின்றனர் என்று நாசா வலைப்பதிவு இடுகை ஒன்று கூறுகிறது.