முடங்கிய இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்கள்; பயனர்கள் அவதி
நேற்று இரவு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் திரட்ஸ் பயனர்கள் பலரும் சமூக ஊடக பயன்பாடுகளை அணுக முடியவில்லை என்று தெரிவித்தனர். மெட்டா குவெஸ்ட் பயனர்களும் தங்கள் ஹெட்செட்களில் உள்நுழைவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். ஒரு சிலருக்கு பக்கங்கள் லோட் ஆவதில் சிக்கல் இருந்த நிலையில், ஒரு சிலரின் கணக்குகள் தானாகவே லாக்-அவுட் ஆகின. இதனால் பலரும் தங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக என சந்தேகம் எழுந்ததாக குறிப்பிட்டுள்ளனர். சுமார் ஒரு மணிநேரம் இந்த செயலிழப்பு நீடித்தது. செயலிகள் முடங்கியதும், பயனர்கள் பலரும், எக்ஸ் தளத்தில் டிவீட்கள் மற்றும் மீம்களை பகிரத்தொடங்கினர். இதில் மஸ்க்கும் தன் பாணியில் பதிலளித்திருந்தார். அதே நேரத்தில், சில யூட்யூப் பயனர்களும், தங்கள் யூடியூப் பக்கத்தில் உள்நுழைவதில் சிக்கல் இருப்பதாக புகாரளித்தனர்.