விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி!
செய்தி முன்னோட்டம்
இன்றிலிருந்து சரியாக 33 வருடங்களுக்கு முன்பு, 1990-ம் ஆண்டு 'ஹபுள்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 535 கிமீ தொலைவில் விண்வெளியில் நிலைநிறுத்தப்படுகிறது ஹபுள். 1990-ல் இருந்து இப்போது வரை ஹபுள் தொலைநோக்கியைக் கொண்டு சுமார் 15 லட்சம் ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
அந்த ஹபுள் தொலைநோக்கியின் முக்கியமான ஆய்வுகள் மற்றும் தகவல்களைப் பார்க்கலாம்.
நமது அண்டம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருப்பதையே ஹபுள் தொலைநோக்கியின் மூலம் தான் கண்டறிந்தனர். மேலும், அதற்குக் காரணமாக இருண்ட ஆற்றல் (Dark Energy) இருப்பதையும் இதன் மூலமே கண்டறிந்தனர்.
சூரிய குடும்பத்தில் முக்கியமான கோளான வியாழனின் மீது ஷூமேக்கர்-லெவி 9 என்ற வால்நட்சத்திரம் மோதியதையும் ஹபுள் தொலைநோக்கியே படம்பிடித்தது.
விண்வெளி
ஹபுள் தொலைநோக்கி.. தெரியாத தகவல்கள்:
ஒவ்வொரு கேலக்ஸியின் மத்தியலும் ஒரு கருந்துளை இருப்பதை உறுதிசெய்தது ஹபுள் தான். கருந்துளைகளைச் சுற்றியிருக்கும் பருப்பொருட்கள் நகரும் வேகத்தை ஹபுள் தொலைநோக்கியால் அளவீடு செய்ய முடிந்தது. இதனைக் கொண்டு கருந்துளைகளின் இருப்பைக் கண்டறிந்து 'Black Hole Hunter' என்ற பெயரையும் பெற்றது.
புறக்கோளின் வளிமண்டலத்தை முதன்முதலாக ஆய்வு செய்தது ஹபுள் தான். பூமியில் இருந்து 150 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள HD 209458-b என்ற புறக்கோளின் வளிமண்டலத்தில் சோடியம் இருப்பதைக் கண்டறிந்தது ஹபுள்.
ஒரு நட்சத்திரம் உருவாவதை 1995-ல் படம்பிடித்தது ஹபுள். அது பில்லர்ஸ் ஆஃப் கிரியேஷன் என அறியப்படுகிறது. இதனையே 2022-ல் மீண்டும் படம்பிடித்தது ஜேம்ப் வெப். முன்பு அறியப்படாத ப்ளூட்டோவின் இரண்டு நிலவுகளையும் கண்டறிந்தது ஹபுள்.