Page Loader
ஓபன்ஏஐ மற்றும் சாம் ஆல்ட்மேன் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் எலான் மஸ்க்
எதற்காக வழக்கினை திரும்ப பெறுகிறார் என்பது குறித்த அறிவிப்புகள் இல்லை

ஓபன்ஏஐ மற்றும் சாம் ஆல்ட்மேன் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் எலான் மஸ்க்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2024
09:55 am

செய்தி முன்னோட்டம்

தொழிலதிபர் எலான் மஸ்க் செவ்வாயன்று, மனித குலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் தொடக்க நோக்கத்தை கைவிட்டதாக குற்றம் சாட்டி, சாட்ஜிபிடி தயாரிப்பாளரான ஓபன்ஏஐ மற்றும் அதன் CEO சாம் ஆல்ட்மேன் மீது தொடுத்திருந்த தனது வழக்கை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார். எனினும் எதற்காக வழக்கினை திரும்ப பெறுகிறார் என்பது குறித்த அறிவிப்புகள் இல்லை. சான் ஃபிரான்சிஸ்கோ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தகவலின்படி, கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் முதன்முதலில் இது சார்ந்து பிப்ரவரியில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்குமாறு மஸ்க்கின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். சுவாரசியமாக, இன்று புதன்கிழமை இந்த வழக்கினை விசாரிக்க நீதிபதி தயாராக இருந்த வேளையில், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

ஓபன்ஏஐ மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் எலான் மஸ்க்