'70% வலைதளங்கள் ஆபத்தில்'; ஏஐ மூலம் கண்டறியப்பட்ட PHP2Shell பாதுகாப்புப் பிழைகள்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் உள்ள சுமார் 70 சதவீத வலைதளங்களின் பின்புற இயக்கமான PHP நிரலாக்க மொழியின் மையப் பகுதியில் இரண்டு தீவிரமான பாதுகாப்புப் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. PHP2Shell என அழைக்கப்படும் இந்தத் தீவிரக் குறைபாடுகள் மூலம், சைபர் கிரைம் குற்றவாளிகள் எத்தகைய அங்கீகாரமும் இல்லாமல் தொலைதூரத்திலிருந்தே தீங்கிழைக்கும் கோடிங்கை இயக்க முடியும். மேலும் ரகசியத் தரவுகளை திருடவும், பாதிக்கப்பட்ட சர்வர்களின் முழுமையான கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் இது வழிவகுக்கும் என்பதால் உலகளாவிய பாதுகாப்பு அமைப்புகள் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளன.
ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம் மூலம் கண்டறியப்பட்ட பாதுகாப்புப் பிழைகள்
விஸ் ரிசர்ச் அமைப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாடல்களை பயன்படுத்தி இந்த பிழைகளைக் கண்டறிந்துள்ளனர்.
கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மற்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் ஜிபிடி மாடல்கள் மூலம் சிக்கலான நினைவகப் பிழைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இது போன்ற சிக்கலான தொழில்நுட்பப் பணிகளை ஏஐ மிகக் குறுகிய காலத்தில் செய்து முடித்துள்ளது.
அதேசமயம், ஹேக்கர்களும் இதுபோன்ற ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி எளிதாக இணையத் தாக்குதல்களை நடத்தலாம் என்ற புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பாதிப்புகள்
பாதிக்கப்பட்ட வெர்ஷன்கள் மற்றும் கோடை கால பாதுகாப்புப் பணிகள்
இந்த குறைபாடுகள் வேர்ட்பிரஸ், ட்ருபல் மற்றும் ஜும்லா போன்ற பிரதான தளங்களை இலக்காகக் கொண்டுள்ளன.
PHP 5.4 பதிப்பு வரையிலான பழைய மென்பொருட்கள் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளன.
அதாவது 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மென்பொருள் அமைப்புகள் கூட இப்போது ஆபத்தில் சிக்கியுள்ளன.
முறையான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே, அமேசான் வெப் சர்வீசஸ் அமைப்புகள் சில சந்தேகத்திற்கிடமான தாக்குதல் முயற்சிகளைக் கண்டறிந்து எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்வுகள்
பாதுகாப்பு நடவடிக்கைகளும் உடனடித் தீர்வுகளும்
PHP டெவலப்பர்கள் குழு உடனடியாக பாதுகாப்பு அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
கூகுள், அமேசான், கிளவுட்ஃபேர் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த சிக்கலைத் தீர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
உடனடியாக தங்கள் சர்வர் மென்பொருட்களை புதுப்பிக்க முடியாத நிறுவனங்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.
வலைதள நிர்வாகி தனது தளத்தின் PHP பதிப்பை சரிபார்த்து உடனடியாக பாதுகாப்பான பதிப்பிற்கு மேம்படுத்துவதே இப்போதைக்கு சிறந்த பாதுகாப்பு முறையாகும்.