Page Loader
கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்!
கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்

கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 01, 2023
01:58 pm

செய்தி முன்னோட்டம்

சமீப காலங்களில் ஸ்மார்ட்போன் செயலிகளின் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் தாக்குதல்களின் அளவு அதிகரித்திருக்கிறது. இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர்களில் உள்ள செயலிகள் மூலமாகவே மால்வேர்கள் பரப்பப்படுகின்றன. ரஷ்யாவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான Dr.வெப் என்ற நிறுவனம், கூகுளின் ப்ளே ஸ்டோரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட செயலிகள் ஸ்பின்ஓகே என்ற 'ஸ்பைவேரா'ல் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்திருக்கிறது. இந்த 100-க்கும் மேற்பட்ட செயலிகளை மொத்தமாக 400 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து தற்போது பயன்படுத்தி வருவதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றைத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். Noizz, Zapya, VFly, MVBit மற்றும் Biugo ஆகிய செயலிகள் இந்த ஸ்பைவேர் பாதிக்கப்பட்ட, அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டாப் 5 இடங்களைப் பிடித்திருக்கின்றன.

சைபர் பாதுகாப்பு

என்ன பாதிப்பு: 

இந்த ஸ்பின்ஓகே என்ற ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட செயலி நமது மொபைலில் இருந்தால், நமது ஸ்மார்ட்போனில் இருக்கக்கூடிய முக்கியமாக தகவல்களை சேகரித்து இதனை உருவாக்கியவர்களின் சர்வர்களுக்கு அனுப்பும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய ஆபத்தைக் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியிருக்கிறது இதனைக் கண்டறிந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம். இந்த ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள் உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்தால், அதனை உடனடியாக மேனுவலாக அன்இன்ஸ்டால் செய்யவும் எச்சரித்திருக்கிறது அந்நிறுவனம். நம்பகமாக மூலங்களில் இருந்த இது போன்ற இணையத் தாக்குதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், மிகவும் தேவையான செயலிகளை மட்டும் சோதனை செய்த பிறகு பதவிறக்கம் செய்ய பயனர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.