புதிதாக எட்டு வைரஸ்களைக் கண்டறிந்த சீன ஆராய்ச்சியாளர்கள்
செய்தி முன்னோட்டம்
இதுவரை கண்டறியப்படாத எட்டு புதிய வைரஸ்களை கண்டறிந்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்று. சீனா அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்தப் புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
இந்தப் புதிய வைரஸ்கள் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வானது வைராலஜிகல் சினிகா என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது தான் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சீனாவைச் சேர்ந்த வெப்பமண்டல தீவான ஹைனானில் உள்ள எலி வகைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே புதிய வைரஸ்களின் இருப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த வைரல்கள் எலிகலிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் பட்சத்தில் கொரோனாவைப் போலவே பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா
சீன அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி:
2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு ஹைனான் தீவில் உள்ள எலிகலிடமிருந்து 682 மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரிகளை 28 பிரிவுகளாகப் பிரித்து ஆய்வகத்தில் சோதனை செய்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவிலேயே எட்டு புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 2019ம் ஆண்டு தொடங்கி உலகில் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பிரிவைச் சேர்ந்த பீட்டாகொரோனா வைரஸூம் ஒன்று.
இந்த எட்டு வைரஸ்களும், கொரோனா வைரஸ், ஃபிளாவி வைரஸ், பார்வோ வைரஸ், ஆஸ்ட்ரோ வைரஸ் பாப்பிலோமா வைரஸ் ஆகிய வைரஸ் குடும்பங்களைச் சேர்ந்தவையாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ்களானது மஞ்சள் காமாலை, டெங்கு மற்றும் ஃப்ளூ முதல் பல்வேறு தோல் நோய்களை பரப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.