NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன?
    அடுத்தாண்டு 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ள இஸ்ரோ

    ISRO 2024: 12 மெகா திட்டங்களை செயல்படுத்த திட்டம்; அவை என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 07, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஆய்வு, தகவல் தொடர்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி, விண்வெளி பயணங்களின் ஈர்க்கக்கூடிய வரிசைக்கு தயாராகி வருகிறது.

    2024 ஆம் ஆண்டை நெருங்கும் போது, ​​இஸ்ரோ 12 குறிப்பிடத்தக்க விண்வெளி பயணங்களை உள்ளடக்கிய ஒரு மெகா திட்டத்தை பட்டியலிட்டுள்ளது.

    இந்த திட்டம் ஒவ்வொன்றும் இந்தியாவின் விண்வெளி திறன்களின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்த தயாராக உள்ளன என தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த விவரங்களை வெளியிட்டார்.

    card 2 

    NISAR- நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்

    நாசா மற்றும் இஸ்ரோ இடையேயான கூட்டு முயற்சியான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) என்பது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பணிகளில் ஒன்றாகும்.

    2024 ஆம் ஆண்டில் ஏவப்படும் நிசார், பூமியின் கண்காணிப்புக்கான முக்கியமான தரவுகளை வழங்கும் முதல் டூயல் -பேண்ட் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் ஆகும்.

    விண்வெளி ஆய்வில் வளர்ந்து வரும் சர்வதேச ஒத்துழைப்பை இந்த பணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    NISAR ஐத் தவிர, இஸ்ரோ இன்னும் பல லட்சிய திட்டங்களை அடுத்தது செயல்படுத்த திட்டமிட்டுள்ளது ISRO.

    card 3

    INSAT-3DS, RISAT-1B மற்றும் Resourcesat-3

    அடுத்த முக்கிய திட்டம் INSAT-3DS. இது ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.

    இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு தொடரின் ஒரு பகுதியாகும் இது.

    இது வானிலை ஆய்வு மற்றும் பேரிடர் மேலாண்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    RISAT-1B மற்றும் Resourcesat-3 ஆகியவை இந்தியாவின் தொலைநிலை உணர்திறன் திறன்களை மேம்படுத்துவதற்கு தயாரிக்கப்பட்டுள்ளன.

    அதே போல, TDS01 மற்றும் SPADEX ஆகியவை நிலவுப் பயணங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கான தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டம்

    card 4

    Oceansat-3A

    Oceansat-3A கடல்சார்வியல் மற்றும் வளிமண்டல ஆய்வுகளில், அதன் முன்னோடிகளின் பாரம்பரியத்தை, மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும்.

    இந்திய தரவு ரிலே செயற்கைக்கோள் அமைப்பு (IDRSS) தொலைநிலை உணர்திறன் மற்றும் அறிவியல் செயற்கைக்கோள்களுடன் நிகழ்நேர தொடர்பு இணைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    GSAT-20 தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    NVS-02, நாவிகேஷன் தரவுகளை மேம்படுத்தும்.

    card 5

    முக்கியமான 'ககன்யான்' திட்டம்

    இஸ்ரோ ஆளில்லாத செயற்கைகோள் திட்டங்களை மட்டும் மேற்கொள்ளப்போவதில்லை. இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும், ககன்யான் திட்டத்தின் சோதனை விமானங்கள் விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருகிறது.

    இந்த முயற்சியானது மனித விண்வெளிப் பயணத்தில் இந்தியாவின் முதல் அடியை குறிக்கும்.

    இது தேசத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். கூடுதலாக, மறுபயன்பாட்டு லான்ச் வெஹிக்கிள் (RLV) திட்டம் செலவு குறைந்த விண்வெளி திட்டங்களுக்கு பயன்படும் என நம்பப்படுகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    விண்வெளி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இஸ்ரோ

    துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்? சந்திரயான் 3
    இஸ்ரோவின் சந்திரயான் திட்டங்களுக்கு உதவிய நாமக்கல் மாவட்டம், எப்படி? சந்திரயான்
    ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    சந்திரயான்-3 ஏவுகணையின் பின்னணியில் குரல் கொடுத்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி காலமானார் சந்திரயான் 3

    விண்வெளி

    ஆதித்யா L1: நான்காவது சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    புறக்கோள் ஒன்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முயற்சிக்கும்  விஞ்ஞானிகள்! அறிவியல்
    பேரண்ட விரிவாக்கத்தில் விஞ்ஞானிகளிடையே நீடிக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியாலும் தீர்க்க முடியாத குழப்பம்! அறிவியல்
    செயல்பாடுகளைத் தொடங்கியது ஆதித்யா L1ல் பொருத்தப்பட்டிருக்கும் STEPS கருவி ஆதித்யா L1
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025