குழந்தைகளுடன் பயணிக்க 2026-ன் உலகின் மிகச் சிறந்த குடும்பத்தினருக்கான 10 விமான நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
குழந்தைகளுடன் விமான பயணம் மேற்கொள்வது என்பது செக்-இன் வரிசைகள் முதல் நீண்ட தூர பயணங்களில் குழந்தைகளை அமைதியாக வைத்திருப்பது வரை பெற்றோருக்கு சவாலான காரியமாகும். இதனை எளிதாக்கும் வகையில் குடும்பங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விமான நிறுவனங்களை கௌரவிக்கும் விதமாக, ஸ்கைட்ராக்ஸ் அமைப்பு 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த குடும்ப நட்பு விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தைவானின் 'இவா ஏர்' (EVA Air) நிறுவனம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
டாப் 10
டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ள ஆசிய, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள்
ஸ்கைட்ராக்ஸ் வெளியிட்டுள்ள டாப் 10 பட்டியலில் இவா ஏர் முதலிடத்திலும், எமிரேட்ஸ் இரண்டாவது இடத்திலும், லுஃப்தான்சா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து காத்தே பசிபிக் ஏர்வேஸ் (4), சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (5), பிரிட்டிஷ் ஏர்வேஸ் (6), கொரியன் ஏர் (7), கத்தார் ஏர்வேஸ் (8), ஆல் நிப்பான் ஏர்வேஸ் (9) மற்றும் ஏர் லிங்கஸ் (10) ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
குறிப்பாக ஆசிய விமான நிறுவனங்கள் இப்பிரிவில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தியுள்ளன.
முக்கிய அளவுகோல்கள்
விமான நிலைய செக்-இன் முதல் கேபின் சேவை வரை கணக்கிடப்பட்ட முக்கிய அளவுகோல்கள்
விமான நிலையத்திற்குள் நுழைந்தது முதல் பயணம் முடியும் வரையிலான ஒட்டுமொத்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமரும் இருக்கை ஏற்பாடு, பிரத்யேக குடும்ப செக்-இன் கவுண்டர்கள், முன்னுரிமை போர்டிங், குழந்தைகளுக்கான பிரத்யேக உணவுகள், பொம்மைகள், இலவச லக்கேஜ் மற்றும் குழந்தை வண்டிகளுக்கான (Pushchairs) விதிகள் ஆகியவை இதில் முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டன.
பயணிகளின் நேரடி அனுபவம்
உலகளாவிய பயணிகளின் நேரடி அனுபவ வாக்கெடுப்பு மூலம் தேர்வான வெற்றியாளர்கள்
கடந்த 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கைட்ராக்ஸ் விருதுகள், விமான நிறுவனங்களின் விளம்பரங்களை அடிப்படையாகக் கொள்ளாமல் உலகம் முழுவதும் பயணம் செய்யும் பயணிகளின் நேரடித் திருப்தி ஆய்வு வாக்கெடுப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றன.
எனவே குழந்தைகளுடன் விடுமுறைப் பயணத்தைத் திட்டமிடும் பெற்றோர், முன்பதிவு செய்வதற்கு முன்பே இருக்கைத் தேர்வு மற்றும் குழந்தைகளுக்கான உணவு விதிகளை சரிபார்த்து இந்த டாப் 10 விமான நிறுவனங்களை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.