உலக மூளை தினம்: மூளையை நல்ல ஆற்றலுடன் வைத்திருப்பதற்கான பயிற்சிகள்
செய்தி முன்னோட்டம்
மன ஆரோக்கியம்: நமது மூளை இல்லையென்றால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நம் வாழ்வின் சிறு சிறு விஷயங்களில் கூட மூளையின் பங்கு மிகப் பெரியது.
அப்படிப்பட்ட மூளையை நல்ல ஆற்றலுடன் வைத்திருப்பதற்கான சில பயிற்சிகளை இப்போது பார்க்கலாம்.
மூளைக்கு வயதாவதை தியானம் குறைக்கிறது என்பது ஒருங்கிணைந்த ஆரோக்கியத்திற்கான தேசிய மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தியானம் செய்வதால் நியாபக சக்தி கூடுகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், யோகாவும் நமது கவனத்தை அதிகரிக்க உதவுகிறது. யோகா. மன தெளிவுவை ஏற்படுத்துவதுடன் நமது நல்வாழ்வையும் மேம்படுத்த உதவுகிறது.
தினமும் 10 நிமிடம் தியானம் அல்லது மூச்சுப் பயிற்சி செய்தால் போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஸுஹ்வ்
'டாய் சி' பயிற்சி
'டாய்-சி' என்பது ஒரு பாரம்பரிய சீன உடல் பயிற்சியாகும். இந்த உடற்பயிற்சி உடல் அசைவுகள் மற்றும் தியானத்தின் ஒரு கலவை என்கின்றனர் அறிஞர்கள்.
இதை செய்வதனால் மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை ஆகியவை நீங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சுடோகு, புதிர்கள், குறுக்கெழுத்துக்கள் மற்றும் சதுரங்கம்
சுடோகு, புதிர்கள், குறுக்கெழுத்துகள் மற்றும் சதுரங்கம் போன்ற அறிவை தூண்டும் விளையாட்டுகளை விளையாட நாம் நம் கவனத்தை 100% ஒருமுகப்படுத்த வேண்டி இருக்கும். இதனால் நமது கவனம், கற்றல், முடிவெடுக்கும் திறன் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்கள் மேம்படுகிறது.
சதுரங்கம் விளையாடுவதால் அறிவாற்றல் கூடுவதை சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
மேலும், புதிர்களை அடிக்கடி தீர்ப்பதால் 'டிமென்ஷியா' நோய் வருவதை தாமதப்படுத்த முடியும் என்கிறது ஒரு ஆய்வு.