NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நியூ இயர் 2025: யார் முதலில், யார் கடைசியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்? நாடு வாரியான விவரங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நியூ இயர் 2025: யார் முதலில், யார் கடைசியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்? நாடு வாரியான விவரங்கள்
    மில்லியன் கணக்கான மக்கள் புத்தாண்டின் விடியலை வரவேற்க தயாராகி வருகின்றனர்

    நியூ இயர் 2025: யார் முதலில், யார் கடைசியாக புத்தாண்டைக் கொண்டாடுவார்கள்? நாடு வாரியான விவரங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 31, 2024
    05:31 pm

    செய்தி முன்னோட்டம்

    டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் புத்தாண்டின் விடியலை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    2025 ஆம் ஆண்டிற்கான வரவேற்பாக உலகெங்கிலும் கண்கவர் கொண்டாட்டங்களில் ஈடுபடும், ஒவ்வொரு பிராந்தியமும் பூமியின் சுழற்சி மற்றும் மாறுபட்ட நேர மண்டலங்களின் காரணமாக வெவ்வேறு நேரங்களில் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

    பசிபிக் பகுதியில் உள்ள சிறிய தீவுகள் முதல் கண்டங்கள் முழுவதும் பரபரப்பான நகரங்கள் வரை, புத்தாண்டில் உலகம் எப்போது துவங்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது!

    ஸ்கை டவரில் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்.#SunNews | #NewZealand | #NewYear2025 pic.twitter.com/xkCoC5ohiR

    — Sun News (@sunnewstamil) December 31, 2024

    முதல் நாடு

    முதல் நாடு: கிறிஸ்துமஸ் தீவு மற்றும் சமோவா, நியூசிலாந்து

    2025ஆம் ஆண்டில் தொடங்கும் முதல் இடம் கிரிபட்டி குடியரசில் உள்ள கிறிஸ்மஸ் தீவு(கிரிடிமதி) ஆகும். பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவு, புத்தாண்டை காலை 5 மணிக்கு EST(பிற்பகல் 3.30 மணி IST) மணிக்கு முதலில் பார்க்கும்.

    சிறிது நேரத்திற்குப் பிறகு, நியூசிலாந்தின் சாதம் தீவுகள் காலை 5.15 மணிக்கு EST(3.45 pm IST) மணிக்குத் தொடரும், அதைத் தொடர்ந்து நியூசிலாந்தின் முக்கிய நகரங்களான ஆக்லாந்து மற்றும் வெலிங்டன், காலை 6 மணிக்கு EST(4.30 pm IST) மணிக்கு விழாவைக் குறிக்கும்.

    பசிபிக் பகுதியில், டோங்கா, சமோவா மற்றும் பிஜி ஆகியவையும் முதல் நாடுகளாக புத்தாண்டை வரவேற்கும். இந்த நாடுகள் நியூசிலாந்திற்கு அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு புதிய ஆண்டை வரவேற்கும்.

    இரண்டாம் இடம்

    இரண்டாம் இடம்: ஆஸ்திரேலியா

    நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து மற்றும் வெலிங்டன் போன்ற நகரங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் மற்றும் கான்பெர்ரா ஆகியவை வானவேடிக்கைகளை ஒளிரச் செய்யும்.

    கொண்டாட்டங்கள் அடிலெய்ட், ப்ரோகன் ஹில் மற்றும் செடுனா போன்ற சிறிய ஆஸ்திரேலிய நகரங்கள் வழியாக நகரும், குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா 2025 இல் ஒலிக்கும்.

    சிட்னி, மெல்போர்ன், கான்பெர்ரா, பிஜி: இரவு 7.30 மணி IST குயின்ஸ்லாந்து, வடக்கு ஆஸ்திரேலியா: இரவு 8 மணி IST

    கிழக்கு

    கிழக்கு: ஜப்பான், கொரியா மற்றும் சீனா

    ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகியவை தொடர்ந்து கொண்டாட்டத்தில் இணைகின்றன. ஜப்பான், தென் கொரியா மற்றும் வட கொரியா காலை 10 மணிக்கு EST (இரவு 8.30 மணி IST) மணிக்கு தங்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கும்.

    மேற்கு ஆஸ்திரேலியா விரைவில் பின்தொடர்கிறது. பெர்த் போன்ற முக்கிய நகரங்கள் IST காலை 10.15 மணிக்கு (இரவு 8.45 மணி IST) புத்தாண்டை வரவேற்கின்றன.

    தொடர்ந்து சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரில் புத்தாண்டை வரவேற்க 12 மணிக்கு தெருக்கள் முழுவதும் வானவேடிக்கைகள், விளக்குகள் மற்றும் புத்தாண்டின் மகிழ்ச்சியான உணர்வால் உயிர்ப்புடன் இருக்கும்.

    தென்கிழக்கு ஆசியா

    தென்கிழக்கு ஆசியா: இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மியான்மர்

    இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் கடிகாரம் அதனை தொடர்ந்து புத்தாண்டை கொண்டாடும், அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் மற்றும் நேபாளம்.

    இந்தியாவும், இலங்கையும் மதியம் 1.30 மணிக்கு EST (இரவு 11 மணி IST) மணிக்கு வரவேற்கும்.

    தென்கிழக்கு பிராந்தியம் முழுவதும் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. அதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானும் அடங்கும்.

    கடைசியாக

    கடைசி நிறுத்தம்: பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகள்

    புத்தாண்டை வாழ்த்துவதற்கான பூமியின் இறுதி இடங்கள் ஹவாயின் தென்மேற்கில் அமைந்துள்ள மக்கள் வசிக்காத பேக்கர் மற்றும் ஹவ்லேண்ட் தீவுகளாக இருக்கும்.

    கடைசியாக 2025ஐக் காணும் வகையில், இந்த தொலைதூரத் தீவுகள், ஜனவரி 1ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்திய அளவில் நடைபெறும் கொண்டாட்டத்தின் இறுதித் தருணத்தைக் குறிக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புத்தாண்டு
    புத்தாண்டு
    புத்தாண்டு கொண்டாட்டங்கள்

    சமீபத்திய

    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா
    குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது  குஜராத்
    ஐபிஎல் 2025: GTக்கு எதிராக சிஎஸ்கே வெற்றி பெறுமா?  குஜராத் டைட்டன்ஸ்

    புத்தாண்டு

    2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள் புத்தாண்டு
    2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  தமிழக அரசு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி

    புத்தாண்டு

    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மும்பை

    புத்தாண்டு கொண்டாட்டங்கள்

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? இந்தியா
    கூட்ட நெரிசலை தவிர்த்து, நியூ இயர் லாங் வீக்கெண்ட்-ஐ கொண்டாட, சில ரம்மியமான சுற்றுலா தலங்கள் உங்களுக்காக! சுற்றுலா
    புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள் புத்தாண்டு
    உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை புத்தாண்டு 2024
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025