இந்த நாடுகளுக்குள் நுழைய இந்தியர்களுக்கு விசா தேவையில்லை: முழு பட்டியல்
செய்தி முன்னோட்டம்
கென்யா மற்றும் ஈரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை.
இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி ஈரானுக்குள் விசா இல்லாமல் நுழையலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
அதனால், இந்தியர்களுக்கான விசா பிரீ நாடுகளின் பட்டியல் மேலும் நீட்டித்துள்ளது.
தனது நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டினருக்கு ஜனவரி 2024 முதல் விசா தேவையில்லை என்று கென்ய ஜனாதிபதி வில்லியம் ருடோ அறிவித்துள்ளார்.
இதனால், சுற்றுலா மற்றும் சர்வதேச உறவுகள் மேம்படும் என்று கென்ய ஜனாதிபதி வில்லியம் ருடோ கூறியுள்ளார்.
33 நாடுகளிலிருந்து ஈரானுக்கு வரும் பயணிகளுக்கான விசா தேவையை ஈரான் ரத்து செய்துள்ளது. இந்த 33 நாடுகளில் இந்தியாவும் அடங்கும்.
டுயவ்ஹ்க்ப்
இந்தியர்களுக்கான விசா பிரீ(Visa-free) நாடுகளின் பட்டியல்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பின்வரும் நாடுகளுக்கு விசா இல்லமலையே பயணிக்கலாம்:
குக் தீவுகள், பிஜி, மைக்ரோனேஷியா, நியு, வனுவாடு, ஓமன், கத்தார், பார்படாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஜமைக்கா, மொன்செராட், கிட்ஸ் மற்றும் நெவிஸ், வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பூட்டான், கஜகஸ்தான், மக்கா(SAR சீனா), நேபாளம், எல் சால்வடார், மொரிஷியஸ், செனகல், துனிசியா, மலேசியா, ஈரான், கென்யா.
நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை தாய்லாந்துக்கு செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.
ட்ஜ்கவ்க்
விசா-ஆன்-அரைவல் வசதியை வழங்கும் நாடுகள்
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சில நாடுகளுக்கு சென்றால் அவர்களுக்கு உடனடியாக விமான நிலையத்திலேயே விசா சுலபமாக வழங்கப்படும். இந்த சேவையை விசா-ஆன்-அரைவல் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட விசா-ஆன்-அரைவல் வசதியை வழங்கும் நாடுகள் பின்வருமாறு:
கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மாலத்தீவு, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, திமோர்-லெஸ்டே, ஜோர்டான், பொலிவியா, புருண்டி, கேப் வெர்டே தீவுகள், கொமோரோ தீவுகள், ஜிபூட்டி, காபோன், கினியா-பிசாவ், மடகாஸ்கர், மொரிட்டானியா, மொசாம்பிக், மொசாம்பிக், சீஷெல்ஸ், சியரா லியோன், சோமாலியா, தான்சானியா, டோகோ, ஜிம்பாப்வே, மார்ஷல் தீவுகள், பலாவ் தீவுகள், சமோவா, துவாலு, செயின்ட் லூசியா, ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான்.