இந்தியாவில் உள்ள இந்த Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
பயோலுமினென்சென்ஸ்(bioluminescence) என்பது ஒரு இயற்கை நிகழ்வாகும். கடலில் வாழும், ஜெல்லிமீன்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், பிளாங்க்டன் மற்றும் பாசிகள் போன்ற உயிரினங்கள், இரசாயன எதிர்வினைகள் மூலம் ஒளியை உருவாக்கும் இயற்கையான நிகழ்வாகும்.
இரவில், நிலவின் ஒளியில், அழகான வெள்ளை முத்துக்கள் போல கடல் நீர் பிரகாசிக்கும், ஒரு மாயாஜால உலகத்தில் இருப்பது போல, நீங்கள் உணருவீர்கள். இந்தியாவில் இது போல, பல பயோலுமினசென்ட் கடற்கரைகள் உள்ளன. அவற்றின் பட்டியல் இதோ:
கோவாவில் உள்ள பெடல்பாடிம் பீச்: அழகான கடற்கறைகளுக்கு பெயர் பெற்ற கோவாவில் உள்ள இந்த பெட்டால்பாடிம் கடற்கரை, அதன் அழகிய வெள்ளை மணல் மற்றும் அழகான சன்செட்டிற்கு அறியப்படுகிறது. இங்கு டால்பின்களையும் காணலாம்.
card 2
ஒளிரும் கடற்கரைகள்
கர்நாடகாவில் உள்ள மட்டு பீச்: கர்நாடகாவின் உடுப்பியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மட்டு பீச், கடல்வாழ் உயிரினங்களால் அவ்வப்போது இரவில் ஒளிரும். 30 கிலோமீட்டருக்கு மேல் நீண்டு இருக்கும் இந்த பீச்சில், நீங்கள் சன்ரைஸ், சன்செட், நடைப்பயிற்சி மற்றும் போன்றவற்றில் ஈடுபடலாம்.
அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் உள்ள ஹேவ்லாக் தீவு: அந்தமானில் உள்ள ஹேவ்லாக் தீவு சுற்றுலாப் பயணிகளை, இந்த பயோலுமினென்சென்ஸ் என்ற அதியசம் நிகழும்போது, கடல்நீர் வழியே பயணிக்கவும் அனுமதிக்கிறது என கூறுகிறார்கள். இந்த நிகழ்வைக் காண, நவம்பர் முதல் ஜனவரி வரை சுற்றுலா பயணிகள் அதிகம் கூடுகிறார்கள்.
சென்னை பெசன்ட் நகர் பீச்: முதன்முதலில், 2019ஆம் ஆண்டில் தான், பெசன்ட்நகர் கடற்கரையில், இந்த அற்புத நிகழ்வை கண்டுபிடித்தனர்.