Loading...
ஒப்பிட்டுப் பார்த்து நிம்மதியை இழக்கிறீர்களா? சோஷியல் மீடியா தரும் போலி மகிழ்ச்சியும், FOMO மனநிலை தீர்வுகளும்
FOMO மனநிலைக்கான தீர்வுகள்

ஒப்பிட்டுப் பார்த்து நிம்மதியை இழக்கிறீர்களா? சோஷியல் மீடியா தரும் போலி மகிழ்ச்சியும், FOMO மனநிலை தீர்வுகளும்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 26, 2026
07:02 pm

செய்தி முன்னோட்டம்

சமூக ஊடகங்களில் பிறர் பதிவிடும் பயணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கையைப் பார்க்கும்போது நமக்குள் ஏற்படும் ஒருவிதக் கவலையே FOMO (Fear Of Missing Out) எனப்படுகிறது. மற்றவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், நாம் மட்டும் ஏதோ ஒன்றை இழக்கிறோம் என்ற தவறான எண்ணத்தை இது உருவாக்கும். இணையத்தில் பகிரப்படும் படங்கள் பெரும்பாலானவை திருத்தப்பட்ட போலி மகிழ்ச்சியே தவிர, அவையே ஒருவரின் முழுமையான வாழ்க்கை உண்மை கிடையாது.

சமூக ஊடகத் தாக்கம்

மன அமைதியைக் கெடுக்கும் ஒப்பீடுகள் மற்றும் சமூக ஊடகத் தாக்கம்

தொடர்ச்சியாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது மனித மூளையில் தற்காலிக மகிழ்ச்சியைத் தரும் டோபமைன் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

இதனால் மொபைல் போனை மீண்டும் மீண்டும் பார்க்கும் பழக்கம் அடிமைத்தனமாக மாறுகிறது.

பிறரின் வாழ்க்கையோடு நம் நிஜ வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது சுயமரியாதை குறைந்து, மன அழுத்தம் மற்றும் தனிமை உணர்வு அதிகரிக்கிறது.

இந்த போலியான டிஜிட்டல் உலகத்திலிருந்து விலகி நிற்பதே மன அமைதியைப் பெறுவதற்கான முதல் படியாகும்.

டிஜிட்டல் டிடாக்ஸ்

டிஜிட்டல் டிடாக்ஸ் மூலம் நிம்மதி பெறுவதற்கான எளிய வழிமுறைகள்

FOMO மனநிலையிலிருந்து விடுபட தினமும் குறிப்பிட்ட நேரத்தை டிஜிட்டல் டிடாக்ஸ் நேரமாக ஒதுக்குங்கள்.

தேவையில்லாத ஆப்ஸ்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களைத் தரும் கணக்குகளை அன்ஃபாலோ செய்யுங்கள்.

மொபைல் திரையைப் பார்ப்பதற்குப் பதிலாக நேரில் மனிதர்களோடு பேசுதல், புத்தகங்கள் படித்தல், நடைப்பயிற்சி மற்றும் தியானம் செய்தல் போன்ற நிஜ உலக செயல்பாடுகளில் கவனத்தைச் செலுத்துங்கள்.

நம்மிடம் இருக்கும் நேர்மறையான விஷயங்களுக்கு நன்றி செலுத்தும் பழக்கம் மனதிற்கு உண்மையான நிம்மதியைத் தரும்.

ADVERTISEMENT

சுய விழிப்புணர்வு

உண்மையான மகிழ்ச்சியைக் கண்டறியும் சுய விழிப்புணர்வு பயிற்சி

நிஜ வாழ்க்கையின் அழகை அனுபவிக்கத் தொடங்கும் போது சமூக ஊடகங்களின் தாக்கம் தானாகவே குறையும்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கைப் பயணமும் வேறுபட்டது என்பதை உணர்ந்து, பிறருடன் ஒப்பீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

சோஷியல் மீடியாவில் பிறர் பெறும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் மட்டுமே வாழ்க்கையின் வெற்றி அளவுகோல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுய விழிப்புணர்வோடு வாழப் பழகும் போது மன அமைதியும், நிலையான மகிழ்ச்சியும் தானாகவே கிட்டும்.

ADVERTISEMENT

நோட்டிபிகேஷன் கட்டுப்பாடு

நோட்டிபிகேஷன் கட்டுப்பாடும் ஆன்லைன் நேரத்தை நிர்வகித்தலும்

அடிக்கடி வரும் போன் நோட்டிபிகேஷன்கள் கவனத்தைச் சிதறடித்து மனதை அலைபாய வைக்கும்.

எனவே அத்தியாவசியமற்ற செயலிகளின் அறிவிப்புகளை முடக்கி வைப்பது நல்லது.

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், காலையில் எழுந்தவுடனும் மொபைல் போனைப் பயன்படுத்தும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

இது இரவில் அமைதியான தூக்கத்தையும், காலையில் புத்துணர்ச்சியையும் தரும்.

நமது பொன்னான நேரத்தை சமூக ஊடகங்களில் வீணாக்குவதற்குப் பதிலாகப் பயனுள்ள பொழுதுபோக்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

மனப்பக்குவம்

உண்மையான மனித உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மனப்பக்குவம்

இணையத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருப்பதை விட, நிஜ வாழ்க்கையில் நம்மைப் புரிந்து கொள்ளும் சில நல்ல மனிதர்களுடன் நேரத்தை செலவிடுவதே உண்மையான மன நிறைவைத் தரும்.

குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரடியாகப் பேசிப் மகிழ்வது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

சமூக ஊடகங்கள் வெறும் ஒரு தகவல் பரிமாற்றக் கருவி மட்டுமே என்பதை உணர்ந்து, அதை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது FOMO போன்ற மன உளைச்சல்களிலிருந்து முழுமையாக விடுபட முடியும்.

ADVERTISEMENT