இங்கிலாந்தில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். கூடுதலாக, பல ஆய்வுகள், தரமான தூக்கம் (7-9 மணிநேரம்) உங்கள் அறிவாற்றல், மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது. ஆனால் தற்போது இருக்கும் பரபரப்பான உலகில், பலருக்கும் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்துவிடுவதில்லை. சிலர் மருத்துவர் உதவியை நாடுவதுண்டு. ஒரு சிலர் தங்கள் மூதாதையர்கள் சொல்வதை கேட்டு, பண்டைய வழக்கங்களை கடைபிடிப்பதுண்டு சுவாரசியமாக, இந்த வழக்கங்கள் மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படி உலகின் ஓவ்வொரு நாட்டிலும் கடைபிடிக்கப்படும் உத்திகளை இந்த பகுதியில் பார்க்கலாம். ஜப்பானில் எப்படி தூங்குகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசையா?
நியூட் ஸ்லீப் (Nude Sleep): இங்கிலாந்து
இங்கிலாந்து நாட்டில் நிர்வாணமாக தூங்குவது மிகவும் பொதுவானது. அதை மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள். ஆய்வின்படி, ஐந்து பிரிட்டன்களில் ஒருவர் (20 சதவீதம்) நிர்வாணமாக தூங்குகிறார். நிர்வாணமாக படுக்கைக்குச் செல்வது அதிக நன்மை பயக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அது உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதால் வேகமாக தூங்குவதற்கான ஒரு சிறந்த வழி என கூறுகிறார்கள். மற்ற நாடுகளை பற்றி அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாம்.