ரஷ்யாவில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஸ்பெஷல் உணவுகள்: சக்-சக், கொரோவை பற்றி தெரிந்துகொள்வோம்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை ரஷ்யாவின் கசான் நகருக்கு வந்திறங்கியபோது, ரஷ்ய பாரம்பரிய உணவுகள் நிறைந்த தட்டுகளுடன் அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது. ரஷ்யாவிற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்க, பிரகாசமான டாடர் உடையில், உள்ளூர் பெண்கள் சக்-சக் மற்றும் கொரோவாய் ரொட்டியை கைகளில் ஏந்தியபடி அவரை வரவேற்றனர். ரஷ்யாவிற்கு வருகைதரும் மோடி மற்றும் பிற உலகத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், கலாச்சார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கசான் அமைந்துள்ள ரஷ்யாவின் டாடர் மற்றும் பாஷ்கிர் பகுதிகளின் சமையல் மற்றும் விருந்தோம்பல் மரபுகளில் அவை ஆழமாக வேரூன்றியுள்ளன. கசான், வோல்கா மற்றும் கசாங்கா நதிகளின் சங்கமத்தில் அமைந்துள்ள ஐந்தாவது பெரிய ரஷ்ய நகரமாகும்.
கலாச்சார முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் உணவு
கசான் நகரம், அதிகமாக துருக்கிய செல்வாக்கைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடிக்கு இனிப்பு மற்றும் சுவையான டாடாரியன் வரவேற்பு, சக்-சக் மற்றும் கொரோவாய் கேக் வழங்கப்பட்டது. சக்-சக் என்பது கார சேவு போன்ற வடிவிலான கோதுமை மாவை வறுத்த துண்டுகளால் செய்யப்பட்ட இனிப்பு. சக்-சக் வட்டமாக அல்லது கனசதுரமாக வடிவமைக்கப்படும். மோடிக்கு பரிமாறப்பட்ட சக் சக் உருண்டையாகவும், பீகாரைச் சேர்ந்த முர்ஹி-க-லை போலவும், வங்காளத்தைச் சேர்ந்த முரி-ஆர்-மோவா அல்லது ஒடிசாவைச் சேர்ந்த முவா போலவும் இருந்தன. சக்-சக் என்பது டாடர்ஸ்தான் மற்றும் பாஷ்கார்டோஸ்தான் பகுதிகளிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவாகும். இது டாடர்ஸ்தானின் தேசிய இனிப்பாக கருதப்படுகிறது.
மைசூர்பாக்கை ஒத்த செய்முறை
சக்-சக் தயாரிக்க, புளிப்பில்லாத மாவு பொதுவாக பல்வேறு வடிவங்களில் வெட்டப்படுகிறது. இந்த மாவுத் துண்டுகள் வெளியில் மிருதுவாகவும் பொன்னிறமாகவும் இருக்கும் வரை எண்ணெயில் ஆழமாக வறுக்கப்படுகிறது. வறுத்த துண்டுகள் ஒரு மேடாக அடுக்கி, சர்க்கரை, தேன் மற்றும் தண்ணீரால் செய்யப்பட்ட சூடான பாகில் நனைக்கப்படுகின்றன. தாராளமான இனிப்பு சிரப் தான் இந்த இனிப்பிற்கு முக்கியமானது. ஏனெனில் இதுதான் வறுத்த மாவை ஒன்றாக இணைக்கிறது. சக்-சக் திருமணங்கள் உட்பட பாரம்பரியக் கொண்டாட்டங்களில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு முக்கிய ஸ்வீட் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள். சக்-சக் திருமணங்கள் உட்பட பாரம்பரியக் கொண்டாட்டங்களில் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு முக்கிய ஸ்வீட் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள். இந்த இனிப்பு பல்கேரிய வேர்களைக் கொண்டுள்ளது.
வடிவங்கள் மற்றும் சின்னங்கள் கொண்ட ரஷ்ய பிரட்
பிரதமருக்கு வழங்கப்பட்ட மற்றொரு உணவு கொரோவை. இது, மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பிரட் வகையாகும். இந்த பாரம்பரிய பிரட், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பகுதியில் திருமணங்களில் அவசியம் இடம்பெறுவது இந்த கொரோவாய் பிரட். சக்-சக் போலல்லாமல், கொரோவாய் ஒரு பிரபலமான பேக்கரி தயாரிப்பு ஆகும். இதன் வேர், கிழக்கு ஸ்லாவிக் நாடுகளில் இருந்து எனக்கூறப்படுகிறது. முன்பு ஸ்லாவ்கள் சூரியக் கடவுளை வழிபட்டனர். எனவே, கேக் பெரும்பாலும் சூரியனின் வட்ட வடிவம் கொண்டிருக்கும் என்கிறார்கள். இது ஒற்றுமை, செழிப்பு மற்றும் கருவுறுதலைக் குறிக்கிறது மற்றும் விடுமுறைக்கு முன்னதாக செய்யப்படுகிறது. கொரோவாய் என்பது பொதுவாக கோதுமை மாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சிக்கலான வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்படுகிறது.