வந்தாச்சு மழைக்காலம்: சாப்பிட வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் இவைதான்!
மழைக்காலங்களில், உணவுகளில் சில மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் பல நோய்கள் தவிர்க்கப்படலாம். மழைக்காலம் என்பது பலருக்கும் கொண்டாட்டமாக இருக்கலாம், ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது தொந்தரவு அளிக்கும் காலம். இந்த பருவத்தில் சுகாதார கவலைகள் அதிகமாக இருக்கக்கூடும். அதை கட்டுப்படுத்த ஒரு சில உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்வதும், ஒரு சிலவற்றை கட்டாயம் தவிர்ப்பதும் அவசியம்.
மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
பழங்கள்: ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு) அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். இவை வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்களால் நிறைந்துள்ளன, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மாதுளை: தினமும் ஒரு மாதுளம் பழம் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பப்பாளி: இது வயிறு மற்றும் வாயு பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. தயிர்: தயிர், பாலை விட சிறந்த உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள ப்ரோ பயோடிக் பாக்டீரியா நோய் எதிர்ப்பு சக்திக்கு பயனுள்ளதாக இருக்கும். காய்கறிகள்: பச்சையாக உட்கொள்வதைவிட, வெந்த காய்கறிகள் மற்றும் சூப் அதிக ஆரோக்கியத்தை தரும். சுண்டைக்காய், பாவக்காய், இஞ்சி, பூண்டு ஆகியவை மழைக்காலங்களில் சேர்க்க வேண்டிய முக்கிய உணவுகள்.
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
சாலையோர உணவுகள்: இவை தண்ணீர் மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தும் என்பதால், இது உணவு அலர்ஜி மற்றும் செரிமான கோளாறுகளை உண்டாக்கக்கூடும். குளிர்பானங்கள் மற்றும் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீர்: இது தொண்டை வலி, கரகரப்பு, சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி, மழைக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்!