
பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவின் வெற்றி பயணம்
செய்தி முன்னோட்டம்
இந்திய ஃபேஷன் உலகத்தில் தற்போது பலரும் உச்சரிக்கும் நட்சத்திர ஆடை வடிவமைப்பாளரின் பெயர் மனிஷ் மல்ஹோத்ரா.
பல முன்னணி நட்சத்திரங்கள், இவரின் கைவண்ணத்தால் ஆன உடைகளை தேடி வாங்குகின்றனர்.
அதுமட்டுமின்றி, இவர் இந்தியா முழுவதும் பல நகரங்களில் ஃபேஷன் படிப்பும் சொல்லி தருகிறார்.
இவரின் தனித்துவமான ஆடை வடிவமைப்பில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அம்பானி வீடு திருமணம் தொடங்கி பல பிரபலங்களின் திருமண விழாக்களில் இவரின் ஆடை வடிவமைப்பு நிச்சயம் இடம் பெரும் அளவிற்கு பிரபலமான மனிஷ், ஆரம்பத்தில் 500 ரூபாய் சம்பளத்தில் தான் தனது பயணத்தை துவங்கினார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
இவரின் வெற்றி பயணத்தை பற்றி மேலும் சில தகவல்கள்!
card 2
ரங்கீலா மூலம் பாலிவுட் என்ட்ரி
மனிஷிற்கு சிறு வயது முதல் வரைவதிலும், சினிமாவிலும் ஆர்வம் அதிகம். அதனால், முறையாக வரைய கற்றுக்கொண்டார்.
படிப்பு முடிந்ததும், ஒரு துணிக்கடையில், மாதம் 500 ரூபாய்க்கு வேளைக்கு சேர்ந்த மனிஷ், பின்னர் தனியாக தையல் கடை துவங்கினார்.
பிரபல நடிகை ஒருவருக்கு ஒரு பாடலுக்காக ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படியாக நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு படத்திற்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பும் கிடைக்கவே, 'ரங்கீலா' என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டின் கதவுகள் இவருக்கு தானாக திறந்தது.
card 3
மைக்கேல் ஜாக்சனுக்கு ஆடை வடிவமைத்த மனிஷ்
அதன் பின்னர், பல நடிகர், நடிகைகளுக்கு அவர் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளராக மாறினார். ஹிந்தியில் பல வெற்றி படங்களுக்கு ஆடை வடிவமைத்த இவர், தமிழ் சினிமாவிலும் பணியாற்றியுள்ளார்.
'இந்தியன்', 'சிவாஜி', 'எந்திரன்' போன்ற படங்களில் இவர் தான் ஆடை வடிவமைப்பாளர்.
அதுமட்டுமின்றி, ஒருமுறை, பிரபல அமெரிக்கா பாப் பாடகர், மைக்கேல் ஜாக்சன் இந்தியாவிற்கு வந்தபோது, அவருக்கு இந்திய பாரம்பரிய உடைகளை வடிவமைத்து தந்தார்.
தற்போதைய கூகிள் CEO சுந்தர் பிச்சை மற்றும் அவரின் மனைவிக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராம்.
ஆனால், இவர் முறையே ஃபேஷன் படிப்பு படித்ததில்லை என்பது கூடுதல் சுவாரசியம்.