
மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
செய்தி முன்னோட்டம்
கோடைக்கால பழங்களின் ராஜாவாக குறிப்பிடப்படும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.
ஆனால் அதே நேரம் இந்த பழத்தை அதிகம் உண்பதால், எடை அதிகரிப்பு மற்றும் திடீர் சர்க்கரை அதிகரிப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என்பதை பற்றியும் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய இந்த பழத்தை உண்பதனால் சாத்தியமான ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதும், அதை தவிர்ப்பதும் முற்றிலும் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதையும் மறக்கக்கூடாது.
இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், நீங்கள் அதை கட்டுப்பாட்டுடன் சாப்பிடலாம்.
மாம்பழத்தை சரியான முறையில் எப்படி உண்பது, அதனால் எடை அதிகரிக்குமா என்பது போன்ற சந்தேகங்களை நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
சரியான முறை
மாம்பழத்தை கட்டுப்பாட்டுடன் எப்படி சரியான முறையில் சாப்பிடுவது?
100 கிராம் மாம்பழத்தில் சுமார் 60 கலோரிகள் மட்டுமே உள்ளன. அதனால் எடை அதிகரிப்பிற்கு சாத்தியங்கள் குறைவே.
தினசரி 110-150 கிராம் வரை சாப்பிடலாம்.
உணவுக்குப் பிறகு மாம்பழங்களை சாப்பிட வேண்டாம், அதற்கு பதிலாக காலையில் ஒரு சிற்றுண்டியாக மாம்பழத்தை சாப்பிடலாம்.
கூடுதலாக நட்ஸ் சேர்த்து மாம்பழ ஷேக் செய்யது உங்கள் புரத தேவையை நிவர்த்தி செய்யலாம்.
இதன் கிளைசெமிக் குறியீடு 8 மட்டுமே, அதாவது சரியான அளவில் சாப்பிடும்போது இது உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்காது.
மாம்பழத்தில் பளபளப்பான சருமம், நிறம் மற்றும் பிரகாசத்திற்கு தேவையான வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது.
நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.