Loading...
RO ஃபில்டரில் இருந்து கொட்டும் ரிஜெக்ட் தண்ணீர் விஷமா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
RO ஃபில்டரில் இருந்து கொட்டும் ரிஜெக்ட் தண்ணீர் பயன்பாடுகள்

RO ஃபில்டரில் இருந்து கொட்டும் ரிஜெக்ட் தண்ணீர் விஷமா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 25, 2026
08:23 pm

செய்தி முன்னோட்டம்

RO வாட்டர் ஃபில்டரில் இருந்து வெளியேறும் ரிஜெக்ட் தண்ணீர் கண்டிப்பாக நச்சுத்தன்மை வாய்ந்த விஷம் அல்ல. சுத்திகரிப்பு செயல்பாட்டின் போது நீரில் உள்ள அதிகப்படியான உப்புக்கள், கிருமிகள் மற்றும் கன உலோகங்கள் பிரிக்கப்பட்டு இந்த கழிவுநீரில் வெளியேற்றப்படுகின்றன. 1 லிட்டர் நல்ல தண்ணீரைப் பெற சுமார் 2 முதல் 3 லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. அதிக உப்புத்தன்மை காரணமாக இது குடிப்பதற்கும் சமைப்பதற்கும் ஏற்றது அல்லவே தவிர ஆபத்தானது அல்ல.

பயன்பாடு

பாத்திரங்கள் கழுவ மற்றும் துணி துவைக்கப் பயன்படுத்தலாம்

RO ஃபில்டரில் இருந்து சேகரிக்கப்படும் இந்தத் தண்ணீரைச் சமையலறைப் பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்தலாம்.

சோப்புப் போட்டு முதற்கட்டமாகக் கழுவுவதற்கு இந்த நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல, வீட்டின் அன்றாடத் துணிகளை ஊறவைப்பதற்கும் துவைப்பதற்கும் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

எனினும், வெள்ளைத் துணிகளில் லேசான உப்புக்கறை படிவதைத் தவிர்க்க, வண்ணத் துணிகளுக்கு மட்டும் இதைப் பயன்படுத்துவது சிறந்தது.

வீடு கழுவ பயன்படுத்தலாம்

வீடு சுத்தம் செய்யவும் வாகனங்களைக் கழுவவும் சிறந்த வழி

இந்தக் கழிவுநீரை ஒரு பெரிய பக்கெட்டில் சேகரித்து வைத்து வீட்டின் தரையைத் துடைக்கவும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவும் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் படிந்துள்ள சேறு மற்றும் தூசிகளைக் கழுவி எடுக்க இந்தத் தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும்.

வாகனங்களைக் கழுவிய பிறகு, லேசான உப்புக்கறை படியாமல் இருக்கக் காய்ந்த துணியால் உடனடியாகத் துடைத்துவிட வேண்டும்.

ADVERTISEMENT

சேமிப்பு

செடிகளுக்கு ஊற்றலாமா? சேமிக்கும் எளிய வழிமுறைகள்

கற்றாழை, செம்பருத்தி போன்ற தாவரங்களுக்கு இந்தத் தண்ணீரை ஊற்றலாம்.

ஆனால், ஒரே செடிக்குத் தொடர்ந்து ஊற்றாமல், சாதாரண தண்ணீருடன் மாற்றி மாற்றி ஊற்றுவது நல்லது.

RO ஃபில்டரின் கழிவுநீர் குழாயை ஒரு பெரிய கேனுடன் இணைத்து வைப்பதன் மூலம், தினமும் வீணாகும் 15 முதல் 20 லிட்டர் தண்ணீரை எளிதாகச் சேமிக்க முடியும்.

இதன் மூலம் வீட்டின் தண்ணீர் தேவையை சமாளிப்பதுடன், பெருமளவிலான குடிநீரையும் வீணாகாமல் சேமிக்க முடியும்.

ADVERTISEMENT