
சுட்டெரிக்கும் வெயில் காலம்; சமாளிக்க நல்லெண்ணெய் குளியல் அவசியம்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் மாறிவரும் தட்பவெட்ப நிலைகளினால், சமீப காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.
அதற்கு காரணம் புவி வெப்பமடைதல்,காடுகள் குறைவது என பல காரணங்கள் கூறலாம்.
இருப்பினும், மாறிவரும் வாழ்க்கை முறையும் ஒரு காரணம் என்பதை பலரும் ஏனோ மறந்துவிடுகிறார்கள்.
முன் காலத்தில், பருவ நிலைக்கு ஏற்றவாறு உணவு பழக்கங்களும், தினசரி வழக்கங்களும் மாறுபட்டன. கோடை வெயிலை சமாளிக்க கேழ்வரகு கூழ், கம்மங்கழி என அவரவர் வீட்டிலேயே தயார் செய்து பருகி வந்தனர். மருதாணி அரைத்து வைத்தனர். வாரந்தோறும் எண்ணெய் குளியல் வேறு.
"இப்போதிருக்கும் அவசர உலகத்தில், அனைவரும் காக்கை குளியல் தான்" என சமாதானம் கூறுவதைவிட்டு, குறிப்பாக வெயில்காலத்தில் எண்ணெய் குளியல் மிகவும் முக்கியம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
card 2
எண்ணெய் குளியல் எவ்வாறு செய்யவேண்டும்?
நல்லெண்ணெய்யுடன் சீரகம் சேர்த்து குளித்தால், உஷ்ணம், பித்த நோய்களை தவிர்க்கலாம்.
நல்லெண்ணெய்யுடன், செம்பருத்தி, நெல்லிக்காய், கரிசாலை சேர்த்து காய்ச்சி தடவிவர, கூந்தல் ஆரோக்கியமடைகிறது.
வாரத்தில் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம். தோல் வியாதிகள் நீங்குகிறது.
உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து, 30நிமிடங்கள் வரை வெயில் பட ஊறவைத்தபின் குளிக்கவேண்டும்.
முடியாத நேரத்தில், உடலின் முக்கிய பகுதிகளான, உச்சந்தலை, உள்ளங்கை, உள்ளங்கால், தொப்புள், அக்குள், மூட்டு ஆகியவற்றில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.
பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஆண்கள், புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும் தான் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்த பிறகு, இயற்கை பொருட்களை பயன்படுத்தி குளிக்க வேண்டும். ஷாம்பு போட்டால் எண்ணெய்பிசுக்கு சரியாக போகாது