குளிர் காலத்தில் பெருஞ்சீரகம், ஓமம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பலரும் குளிர்காலத்தை ஒரு இனிமையான பருவமாக கருதினாலும், ஒரு சிலருக்கு இந்த பருவமற்றதால், நீடித்த செரிமான பிரச்சனைகள், தோல் மற்றும் முடி பிரச்சனைகள் ஏற்படும். பொதுவாக குளிர்காலத்தில் அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இந்த குளிர் காலத்தில் ஏற்படக்கூடிய சளி, உடல் தொந்தரவு, வைரஸ் தொற்று போன்றவற்றை, ஒரு சில வீட்டு வைத்தியங்கள் மூலம் தவிர்க்கலாம். குறிப்பாக பெருஞ்சீரகம் (சோம்பு) மற்றும் ஓமம் கலந்த தண்ணீர் பருகுவதன் மூலமாக பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றது. அவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
குளிர்காலங்களில் சுற்றுப்புற வெப்பநிலை குறைவது நமது செரிமான அமைப்பை சற்றே குழப்பிவிடும். மெதுவான வளர்சிதை மாற்றத்தின் விளைவாக, உடலுக்கு ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்ச முடியாமல், சில உணவுகளை ஜீரணிக்க முடியாமல், செரிமான பிரச்னை உண்டாகும். செரிமானத்திற்கான நன்மைகள் நிரம்பிய ஓமம், அமிலத்தன்மை, வாயு மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த மூலப்பொருளை சோம்புடன் உட்கொள்ளும்போது உங்கள் வயிறு நன்றாக இருக்கும்.
உடலை சூடாக வைத்திருக்கும்
கம்பளி மற்றும் வசதியான போர்வைகளையும் தாண்டி குளிர் தாக்குகிறது என்றால், இந்த மருந்து கலவையை நீங்கள் தினமும் காலையில் உட்கொண்டால், உங்கள் உடலின் இயற்கையான சூடு அதிகரித்து, உங்களுக்கு வெதுவெதுப்பை தரும். சோம்பு மற்றும் ஓமம், இவை இரண்டிலும் வெப்பமயமாதலுக்கான சேர்மங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் உடலை உள்ளே இருந்து வலுப்படுத்துகின்றன மற்றும் குளிர்ச்சியிலிருந்து உங்கள் உடலுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. சிறந்த நிவாரணத்திற்கு, இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
எடை இழப்புக்கு உதவுகிறது
உங்கள் உடலில் அதிகரிக்கும் எடையை இழக்க கடினமாக இருப்பவர்களுக்கு, சோம்பு- ஓமம் கலந்த தண்ணீர் உதவுகிறது. இந்த கலவை எடை குறைப்பிற்கு உதவுவதாக உணவு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதனை குடிப்பதால், வயிறு நிரம்பிய உணர்வு வரும். அதனால், அதிகப்படியான உணவை தேடி உண்பதை தவிர்க்க முடியும். மேலும் ஓமம் கடினமான உடல் கொழுப்புகளை கரைக்க உதவும். அதே வேளையில், பெருஞ்சீரகம் குறைந்த அளவு கலோரிகளை உடலுக்கு தருகிறது. அதோடு, உங்கள் பசியைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
குளிர்கால மாதங்களில் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உச்சத்தில் இருப்பதால், இந்த பானம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். ஓமம் மற்றும் சோம்பு, இரண்டிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், அவை பருவகால நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உங்கள் உடலின் பாதுகாப்பிற்கு உதவுவதன் மூலம், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் சளி, இருமல், சைனசிடிஸ், வைரஸ் போன்றவற்றை எளிதில் விரட்டலாம்.
சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் நிறைந்த ஓமம் விதைகள,. உங்கள் சுவாச மண்டலத்தை மேம்படுத்துகின்றன. மேலும், இது பெருஞ்சீரகம் விதைகளுடன் இணைந்தால், இந்த கலவையானது சளியால் ஏற்படும் மூக்கடைப்பு, சளி, வறண்ட மற்றும் சளி இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது. சுவாச ஆரோக்கியத்திற்கு இந்த அற்புத பானத்தின் நன்மைகளை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் சிறிது இஞ்சியையும் சேர்க்கலாம். ஓமம் தண்ணீர், உங்களை வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிலிருந்து மட்டுமல்ல, குளிர்காலத்தில் ஏற்படும் நோய் தொற்று ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுகிறது.