Loading...
20-களிலேயே வழுக்கை விழுகிறதா? 87% இளைஞர்களைத் தாக்கும் முடி உதிர்தல்; மருத்துவர்கள் கூறும் உண்மையான காரணங்கள்
87% இளைஞர்களைத் தாக்கும் முடி உதிர்தல்

20-களிலேயே வழுக்கை விழுகிறதா? 87% இளைஞர்களைத் தாக்கும் முடி உதிர்தல்; மருத்துவர்கள் கூறும் உண்மையான காரணங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 11, 2026
06:41 pm

செய்தி முன்னோட்டம்

முடி உதிர்தல் என்பது பொதுவாக நடுத்தர வயதினருக்கு ஏற்படும் பிரச்சனையாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் அது மிகவும் இளம் வயதிலேயே ஆண்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 2025 முதல் ஆகஸ்ட் 2026 வரை நடைபெற்ற சுமார் 7 லட்சம் முடி உதிர்தல் மருத்துவ ஆலோசனைகளை ஆய்வு செய்ததில், உதவி கோரியவர்களில் 87.2% பேர் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வு மருத்துவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கவனிக்க தவறுதல்

ஆரம்பக் கட்டத்திலேயே கவனிக்கத் தவறப்படும் வழுக்கை

மருத்துவப் பரிசோதனைக்கு வரும் இளைஞர்களில் 65.2% பேர் ஏற்கனவே நார்வுட் ஸ்டேஜ் 3 அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரமான முடி இழப்பு நிலையை எட்டியுள்ளனர்.

25 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் நெற்றிப் பகுதியின் இரு பக்கங்களிலும் முடி பின்வாங்குவதைப் பற்றியே அதிகம் கவலைப்படுகின்றனர்.

ஆனால், 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் முடி மெலிதாவது மற்றும் அடர்த்தி குறைவது பற்றியே அதிகம் ஆலோசிக்கின்றனர்.

ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறுவதே பிரச்சனை தீவிரமடைய முக்கியக் காரணமாக அமைகிறது.

காரணம்

மரபணுப் பிரச்சனையா அல்லது மன அழுத்தமா?

ஆண்களுக்கு ஏற்பாடும் தொடர்ச்சியான முடி இழப்பிற்கு ஆண்ட்ரோஜெனடிக் அலோபீசியா எனப்படும் மரபணு ரீதியான ஆண்-பாணி முடி இழப்பே முக்கியக் காரணமாகும்.

இது ஹார்மோன் மாற்றங்களால் பருவம் எய்திய பிறகே தொடங்கலாம்.

அதேவேளையில், திடீரென ஏற்படும் அதிகப்படியான மன அழுத்தம், சத்துக்களின்மை மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் டீலோஜென் எஃப்ளூவியம் எனப்படும் தற்காலிக முடி உதிர்வும் ஏற்படுகிறது.

மன அழுத்தமும் மரபணு அமைப்பும் சேரும் போது முடி உதிர்தலின் வேகம் இரட்டிப்பாகிறது.

ADVERTISEMENT

சிகிச்சை

மினாக்ஸிடில் மற்றும் முடி மாற்று சிகிச்சை தீருமா?

முடி உதிர்வைக் கட்டுப்படுத்த மினாக்ஸிடில் மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், இதன் பலன்கள் நபர் நபருக்கு மாறுபடும் என்பதால் தொடர்ச்சியான பயன்பாடு அவசியமாகிறது.

முடி மாற்று அறுவை சிகிச்சை பாதிக்கப்பட்ட இடத்திற்கு மீண்டும் முடியைத் தருமே தவிர, அடியில் இருக்கும் மரபணு ரீதியான முடி உதிர்வு செயல்பாட்டை நிறுத்தாது.

எனவே, தலைமுடியில் மாற்றங்களைக் கண்டவுடனேயே சுய மருத்துவம் செய்யாமல், தோல் மருத்துவரை சந்தித்து சரியான காரணத்தைக் கண்டறிவதே சிறந்த தீர்வாகும்.

ADVERTISEMENT